அனைத்து விஷயங்களிலும் தமிழ்நாடு அரசு மத்திய அரசை குறைகூறுவது சரியாகாது என தமாக தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் மன்றத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தொழிற்சங்க பேரவை சார்பில் தொழிலாளர் தின விழா நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.வாசன், தொழிலாளர்களின் பிரச்சினைக்காக குரல் கொடுப்பதில் தமாகா என்றும் முன்னணியில் நிற்கும். அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகளை பெறுவதில் வருவாய்த்துறை கடுமையான விதிமுறைகளை வைத்துள்ளது. அதை தளர்த்தி தொழிலாளர்கள் உரிமைகளை பெறுவதை எளிதாக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து பேசிய அவர், பெட்ரோல், டீசல் விலை சர்வதேச சந்தை நிலவரத்தை பொறத்து நிர்ணயிக்கப்படுகிறது. இதற்கு மத்திய அரசை குற்றம் சுமத்துவது சரியாகாது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, கூடுதலாக சொத்து வரியை உயர்த்தி மிகப்பெரிய ஏமாற்றத்தை திமுக அரசு கொடுத்துள்ளது. தமிழ்நாடு அரசு தன்னுடைய இயலாமையை மறைக்கவே அனைத்து விஷயங்களிலும் மத்திய அரசு மீது குற்றம் சுமத்தி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
மேலும் கடந்த சில மாதங்களாக பெண்கள் மீதான வன்முறைகள் மற்றும் கொள்ளை உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் அதிகரித்திருப்பது வேதனையளிப்பதாக தெரிவித்தார்