முக்கியச் செய்திகள் தமிழகம்

மின் அளவீடை அறிந்து கொள்ள புதிய செயலி: முதலமைச்சர் அறிவுறுத்தல்

மின் கணக்கீட்டை நுகர்வோர்களே அறிந்து கொள்ளும் வகையில் புதிய செயலியை அறிமுகப்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

மின் அளவீடு மற்றும் கணக்கீட்டை நுகர்வோர்களே அறிந்து கொள்ளும் வகையில் புதிய செயலியை அறிமுகப்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (22.07.2021) தலைமைச் செயலகத்தில் எரிசக்தித் துறையின் செயல்பாடுகள் குறித்தும், துறையின் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்தும், அடுத்த 10 ஆண்டுகளில் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள திட்டங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தமிழ்நாடு அரசு கடந்த 2 மாதங்களில் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் மூலம் ரூ.1,593 கோடி சேமித்தது குறித்து முதலமைச்சர் பாராட்டினார். மேலும் அனைத்து வகை செலவீனங்களையும் ஆராய்ந்து சேமிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படியும் அதன் மூலம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் நிதி நிலைமையை சரி செய்யவும் அறிவுறுத்தினார்.

நுகர்வோர்கள், அவர்களுடைய மின் அளவீடு மற்றும் கணக்கீட்டை தாங்களே தங்கள் கைபேசி செயலி மூலம் அறிந்து கொள்ள புதிய செயலியை அறிமுகப்படுத்துமாறும், மின் கணக்கீட்டாளர்கள் கைபேசி செயலியின் மூலம் மின் கணக்கீடு எடுத்தவுடனேயே நுகர்வோர்கள் தங்களின் கணக்கீட்டு விவரத்தை அறிந்துகொண்டு கட்டணத்தை செலுத்த ஏதுவாக புதிய செயலியை அறிமுகப்படுத்துமாறும் முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

ஆய்வுக் கூட்டத்தில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement:

Related posts

தமிழகத்தில் பாஜக நுழைந்துவிட்டது: எல்.முருகன்

10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அலகுத் தேர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

Gayathri Venkatesan

நடிகர் கமல்ஹாசனுக்கு தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்; அமைச்சர் கடம்பூர் ராஜூ கருத்து!

Saravana