முக்கியச் செய்திகள் தமிழகம்

அதிமுக ஆட்சியில் மேட்டூர் சரபங்கா திட்டத்தில் ஒரு துளி நீரை கூட சேமிக்கவில்லை -அமைச்சர் துரைமுருகன்

கடந்த அதிமுக ஆட்சியில் மேட்டூர் சரபங்கா திட்டத்தில் ஒரு துளி நீரை கூட
சேமிக்கவில்லை என திருச்சி முக்கொம்பு மேலணையில் ஆய்வு செய்த
பின்னர் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேட்டி அளித்தார்.

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் முக்கொம்பு மேலணையினையில் இன்று
நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார்,பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்


இதில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ‘தாமிரபரணி,காவிரி ஆறுகளில்
பெருக்கெடுக்கும் நீர் வீணாக கடலில் கலக்கிறது. வளர்ந்து வரும் விஞ்ஞானத்தில் வெள்ள நீர் சேமிப்பு சாத்தியமாகும் . வீணாகும் நீரைச் சேமித்து வைக்கும் நடவடிக்கைகளை திமுக அரசு மேற்கொள்ளும். மேட்டூர் சரிபங்கா இணைப்பு பணிகள் மூலம் கடந்த அதிமுக ஆட்சியில் ஒரு துளி நீரைக் கூட சேமிக்கப்படவில்லை என்றார்.

மேலும், ‘தெலுங்கானா அரசு வெள்ள நீரைச் சேமித்து வைக்கிறது அது போலத் திட்டங்கள் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படுமா என்கிற கேள்விக்கு, இறந்தவர்களுக்கும் உயிரூட்டும் வகையில் விஞ்ஞானம் வளர்ச்சி பெற்று உள்ளது. எனவே வெள்ளநீரைச் சேமிக்கும் திட்டம் கண்டிப்பாகச் சாத்தியமானது தான் என பதிலளித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ‘தமிழகத்தில் அனைத்து ஏரி குளங்களும் தனது முழுக்க கொள்ளளவை எட்டி உள்ளது. கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் பொதுப்பணித்துறையில் பணியாற்றிய தற்காலிக ஊழியர்கள் ஒருவரை கூட பணி நிரந்தரம் செய்யவில்லை – ஆனால் வரும் ஐந்து ஆண்டுகளில் நிரந்தர பணியாளர்களை பணியாற்ற திமுக அரசு நடவடிக்கை மேற்கொள்ளும். காவிரி கோதாவரி திட்டம் தமிழகத்தில் மட்டுமல்ல மற்ற மாநிலங்களிலும் பணிகள் தாமதமாக நடைபெற்று வருகிறது’என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பாஜக அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும் – பாஜக சீனிவாசன்

Gayathri Venkatesan

திருப்பூர்: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை வைக்க அனுமதி வழங்கப்படவில்லை – தமிழ்நாடு அரசு

Arivazhagan Chinnasamy

வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இன்னும் தண்ணீர்; மக்கள் வேதனை

Halley Karthik