முக்கியச் செய்திகள் தமிழகம்

மேகதாதுவில் ஒரு செங்கலைக் கூட எடுத்து வைக்க முடியாது; பிரேமலதா

மேகதாதுவில் அணைகட்டுவதற்கு ஒரு செங்கலைக் கூட எடுத்து வைக்க அனுமதிக்க முடியாது என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

மேகதாது பகுதியில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஓசூரில், பிரேமலதா தலைமையில் தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். முன்னதாக ட்ராக்டரில் ஊர்வலமாக வந்த பிரேமலதா, பின்னர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது கர்நாடக அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பின்னர் பேசிய பிரேமலதா, தமிழ்நாடு ஏற்கனவே வறண்ட பூமியாக உள்ளது. மேகதாதுவில் அணை கட்டினால் தமிழ்நாடு பாலைவனம் ஆகும். தஞ்சைக்கு நீர் வரவில்லை என்றால் விவசாயம் கேள்விக்குறியாகும் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டின் சார்பில் எச்சரிக்கிறோம். ஓசூர் எல்லைவரை வந்துவிட்டோம், பெரும்படை திரட்டி பெங்களூக்குள் நுழைய முடியும், நமக்குள் பிரிவினை வேண்டாம் என தமிழக விவசாயிகள் சார்பில் கூறிக்கொள்கிறேன். தமிழ்நாடு மக்கள் காந்தியாக இருக்க வேண்டுமா, சுபாஷ் சந்திரபோசாக இருக்க வேண்டுமா என கர்நாடகா முடிவு செய்ய வேண்டும் என ஆக்ரோஷமாக தெரிவித்தார்,

மேகதாதுவில் ஒரு செங்கல் கூட வைக்க விட மாட்டோம். கர்நாடக தமிழக மக்கள் இடையே பிரிவினை இல்லை; ஆகவே தண்ணீரிலும் பிரிவினை வேண்டாம். மத்தியிலும், கர்நாடகாவிலும் பாஜக ஆட்சி நடக்கிறது. ஆகவே மத்திய அரசு கர்நாடக அரசிடம் பேசி கர்நாடக அணை திட்டத்தை கை விட வேண்டும் என தெரிவித்தார்.

Advertisement:
SHARE

Related posts

ஆல் பாஸ் அரசாணையை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு!

Gayathri Venkatesan

செல்போன் பயன்படுத்துவதை தந்தை கண்டித்ததால், மகன் தூக்கிட்டு தற்கொலை!

Jayapriya

டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்!

Jayapriya