முக்கியச் செய்திகள் தமிழகம்

ஊரடங்கு நீட்டிப்பு ஆலோசனை நாளை ஒத்திவைப்பு

ஊரடங்கு தளர்வு குறித்து முதலமைச்சர் தலைமையில் இன்று நடைபெறுவதாக இருந்த ஆலோசனை கூட்டம் நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

தமிழ்நாட்டில் கொரோனா 2ம் அலை ஏப்ரல் மாதத்தில் உச்சத்தை தொட்டது. அதன்பின், மே மாதம் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றபின் அம்மாத 2வது வாரத்தில் தமிழ்நாட்டில் முழு ஊரடங்கை அமல்படுத்தார். அதன்பின் கொரோனா பரவல் படிப்படியாக குறையத்தொடங்கியதை அடுத்து ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்தது. தற்போது அமலில் உள்ளதளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 23ந்தேதி காலை 6 மணியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து ஊரடங்கு குறித்து இன்று காலை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைபெறவிருந்த ஆலோசனை கூட்டம் நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாளை நடைபெறவுள்ள ஆலோசனை கூட்டத்தில், தலைமைச் செயலாளர் இறையன்பு, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அத்துறையின் செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். இதில், பள்ளிகள், திரையரங்குகளை திறப்பது தொடர்பாக மருத்துவ வல்லுநர்களின் கருத்துக்களை முதலமைச்சர் கேட்டறிவார் என தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை கட்டாயம்; மா.சுப்பிரமணியன்

Saravana Kumar

“முந்தைய தேர்தல் வாக்குறுதிகளை அதிமுக நிறைவேற்றவில்லை” மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

Halley karthi

பென்னிகுவிக் இல்லத்திற்கு ஆதாரம் உள்ளதா? – மு.க.ஸ்டாலின் கேள்வி

Saravana Kumar