முக்கியச் செய்திகள் இந்தியா

உ.பி முன்னாள் முதலமைச்சர் கல்யாண் சிங்கிற்கு வென்டிலேட்டர் சிகிச்சை

உத்தரபிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் கல்யாண் சிங்கிற்கு செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உத்தரபிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும் ராஜஸ்தான் மாநில முன்னாள்
ஆளுநருமான கல்யாண் சிங்கிற்கு, உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, கடந்த மாதம் 4 ஆம் தேதி லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலை யில் அவர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.

மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமிஷ் ஷா, உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் மருத்துவமனையில் சென்று அவர் உடல் நிலை குறித்து விசாரித் தனர்.

இந்நிலையில், இப்போது அவர் உடல் நிலை மோசமாகி இருப்பதாக அந்த மருத்துவ மனையின் இயக்குநர், பேராசிரியர் ஆர்.கே திமன் தெரிவித்துள்ளார். அவருடைய
ரத்த அழுத்தம் குறைந்திருப்பதாகவும் சிறுநீரகப் பிரச்னை காரணமாக அவருக்கு டயாலிசிஸ் செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை பெற்று வரும் அவருடைய உடல்நிலை யில் இன்று மாலை அல்லது நாளைக்குள் என்ன முன்னேற்றம் ஏற்படுகிறதை என்பதை பார்ப்போம் எனவும் அவர் கூறியுள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

இலங்கைக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா பேட்டிங்

Jeba Arul Robinson

புதுச்சேரியில் மதுபானங்களின் விலை குறைந்தது!

Ezhilarasan

மீனவர்களுக்கு நிவாரண நிதி உயர்த்த முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார்: எம்.பி கனிமொழி

Vandhana