முக்கியச் செய்திகள் தமிழகம்

‘பிராண்டிங் செய்யாதது மிகப்பெரிய தவறு’ – அமைச்சர் மனோ தங்கராஜ்

நியூஸ் 7 தமிழுக்கு பிரத்தேக பேட்டியளித்த தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ‘பிராண்டிங் செய்யாதது மிகப்பெரிய தவறு’ என தெரிவித்தார்.

நியூஸ் 7 தமிழுக்கு பிரத்தேக பேட்டியளித்த அமைச்சர் மனோ தங்கராஜ், கடந்த ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டில் உள்ள வாய்ப்புகள், சலுகைகள் குறித்து பிராண்டிங் செய்யாதது மிகப்பெரிய தவறாக கருதுவதாக தெரிவித்தார். பிராண்டிங் செய்யாததால், தமிழ்நாடு தொழிலதிபர்கள் பூனே, நொய்டா, கர்நாடகாவில் முதலீடு செய்துள்ளதாக குற்றம்சாடிய அவர், ஆக்கப்பூர்வமான முயற்சிகள் எடுக்காததே இதற்கு காரணம் என தெரிவித்தார்.

மேலும், இங்கிலாந்து பயணம் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்த அவர், பலர் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய உத்தரவாதம் அளித்துள்ளதாக குறிப்பிட்டார். முதலீடு செய்ய உத்தரவாதம் அளித்தவர்களை அழைத்து முதலமைச்சர் தலைமையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட இருப்பதாக தெரிவித்த அவர், முதலீட்டாளர்களை ஈர்க்க ஒருசில நாடுகளுக்கு போக வேண்டிய தேவை உள்ளது என தெரிவித்தார். மேலும், தமிழ்நாட்டை குறித்த விளம்பரம் செய்ய வேண்டிய கடமையும் உள்ளதாக அவர்,  குறிப்பிட்டார்.

அண்மைச் செய்தி: ‘என்னது யூடியூபில் கமெண்ட் போட காசு குடுக்கனுமா?’

தமிழ்நாடு குறித்து விளம்பரம் செய்யப்படாததை தான் வீழ்ச்சியாக பார்ப்பதாக தெரிவித்த அவர், முதலமைச்சர் செல்லும் வேகத்திற்கு முயற்சிகள் செய்ய வேண்டியுள்ளது என குறிப்பிட்டார்.

மேலும், பென்னி குவிக் சிலை அமைக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்ததற்கு அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சி வெள்ளத்தில் பூரித்து போய் உள்ளதாக தெரிவித்த அவர், முதலமைச்சருக்கு மிகப்பெரிய வரவேற்பு அளிக்க வேண்டும் என பென்னி குவிக் குடும்பத்தினர் தெரிவித்துள்ளதாக கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Advertisement:
SHARE

Related posts

மத்திய அரசின் தவறான கொள்கையே காரணம் – ப.சிதம்பரம் சாடல்

Ezhilarasan

சென்னை சென்ட்ரலில் மத்திய சதுக்கத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

Arivazhagan CM

விருப்ப மனு அளித்தோருக்கான நேர்காணல் நாளை தொடக்கம்!

Gayathri Venkatesan