உத்தராகண்ட் மாநிலம் பித்தோராகரில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு, சேதங்கள் குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை.
இதுகுறித்து, தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்ட தகவலில், இன்று காலை 10.30 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 4.6 என பதிவாகியுள்ளது. பித்ரோகருக்கு வடகிழக்கில் 20 கி.மீ. தொலைவில் 5 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து எந்தத் தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை.







