முக்கியச் செய்திகள் இந்தியா குற்றம்

அரசு பணிக்காக போலி சான்றிதழ்கள் வழங்கிய வடமாநிலத்தவர்கள்

மத்திய அரசு பணிகளில் சேர , போலி மதிப்பெண் சான்றிதழ் வழங்கி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்கள் விண்ணப்பித்துள்ளதாக, அரசுத் தேர்வுகள் இயக்ககம் நடத்திய ஆய்வில் அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.

அஞ்சல் ஊழியர் பணி, சி.ஆர்.பி.எஃப் உள்ளிட்ட மத்திய அரசின் நிறுவனங்களில், தமிழ்நாட்டு பணிக்கு சேர வடமாநிலத்தவர்கள், 200-க்கும் மேற்பட்டோர் ,போலி மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கியது உறுதியானது. இதையடுத்து அவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க, அரசுத் தேர்வுகள் இயக்ககம் பரிந்துரை செய்திருந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மத்திய அரசு பணியில் சேர போலி சான்றிதழ் வழங்கிய வடமாநிலத்தவர்கள்

இந்நிலையில், மத்திய அரசு பணிகளில் சேர விண்ணப்பித்துள்ள 2,500-க்கும் மேற்பட்ட வடமாநிலத்தவரின் மதிப்பெண் சான்றிதழ்களை ஆய்வு செய்ததில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலி சான்றிதழ்கள் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், உத்தரப் பிரதேசத்தின் தியோரியா மாவட்ட அஞ்சல் அலுவலக பணியில் சேர விண்ணப்பித்துள்ள, 500 பேரின் சான்றிதழ்கள் முற்றிலும் போலி எனவும், தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் வழங்கியது போல், இந்தியை முதன்மை பாடமாகக்கொண்டு, உத்தரப்பிரதேசத்தில் போலிச் சான்று அச்சடிக்கப்படுவதாகவும் அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram