முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

கூட்டு பாலியல் வன்கொடுமை ? – வட மாநில இளைஞர்கள் கைது

ராமேஸ்வரம் அருகே வடகாடு பகுதியில் சந்திரா என்ற பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில், 6 வட மாநில இளைஞர்களை கைது செய்துள்ளதாக ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

 

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து மருத்துவ பரிசோதனை எடுக்கப்பட்டதாகவும், கொலை செய்யப்பட்ட பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாரா? என்பதும் தெரியவரும் என்றார். அந்த பெண்ணின் சடலத்தை போலீசார் மீட்டபோது, அந்த பெண் அரை நிர்வாணத்தில் இருந்ததால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதாக காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் கூறினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 

மருத்துவ அறிக்கைக்கு பின் முழு விவரம் தெரிவிக்கப்படும் என கூறிய அவர், இந்த வழக்கு தொடர்பாக வடமாநிலத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்த பெண்ணின் உறவினர்களால் தாக்கப்பட்ட நிலையில் அவர்கள் தற்போது சிகிச்சை மேற்கொண்டு வருவதாகவும், சிகிச்சைக்கு பின் தான் முழு விசாரணை தொடங்கப்படும் எனவும் கூறினார். இந்த ஆறு பேரில் மூன்று பேர் பரவலாக தமிழ் பேசுவதாகவும் தெரிவித்தார்.

இதனிடையே, உயிரிழந்த பெண்ணின் இரண்டாவது மகள் தங்களிடம் கோரிக்கை வைத்திருப்பதாகவும், தனது தாயை கொன்றவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து தூக்கிலிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டதாக காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கட்டுப்பாடுகளை கடைபிடித்தால்தான் தளர்வுகள் நீடிக்கும்: சென்னை ஆணையர்

Ezhilarasan

ஜெயலலிதா உரையுடன் முதலமைச்சர் வெளியிட்ட சிறப்பு மலர்

Ezhilarasan

சிறுமி கருமுட்டை விவகாரம்; தனியார் மருத்துவமனையில் அதிகாரிகள் ஆய்வு

Saravana Kumar