நடிகர் தனுஷின் பிறந்தநாளன்று ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
மித்ரன் ஜவகர் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘திருச்சிற்றம்பலம்’. இப்படத்தில், தனுஷுடன் ராஷி கண்ணா, நித்யா மேனன், பிரியா பவானி சங்கர் ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்கிறார்கள். பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்கிறார்.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு 2021 ஆகஸ்ட் 21-ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில், ‘திருச்சிற்றம்பலம்’ படத்தை தனுஷின் பிறந்தநாளான ஜூலை 28-ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ரூஸோ சகோதரர்கள் இயக்கும் ‘தி க்ரே மேன்’ படமும் நெட்ஃப்ளிக்ஸில் வரும் ஜூலை 22-ஆம் தேதி வெளியாகிறது.








