வடமாநில தொழிலாளர்களை சகோதரத்துவத்தோடு பார்க்க வேண்டும் – தமிழிசை செளந்தரராஜன்

வடமாநில தொழிலாளர்களை சகோதரத்துவத்தோடு பார்க்க வேண்டும் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். மகளிர் தின விழாவின் ஒருபகுதியாக புதுச்சேரி சுகாதாரத் துறை சார்பில், பெண்களின் ஆரோக்கியத்தை பேணிக் காக்க…

வடமாநில தொழிலாளர்களை சகோதரத்துவத்தோடு பார்க்க வேண்டும் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

மகளிர் தின விழாவின் ஒருபகுதியாக புதுச்சேரி சுகாதாரத் துறை சார்பில், பெண்களின்
ஆரோக்கியத்தை பேணிக் காக்க வேண்டும் என்பதற்காக மிதிவண்டி பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆளுநர் மாளிகை முன்பு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த பேரணியில் 500க்கும் மேற்பட்ட மகளிர், மாணவர்கள் மிதிவண்டிகளில் பல்வேறு நகரில் வலம் வந்தார்கள்.

இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை
செளந்தரராஜன், புதுச்சேரியில் அதிகளவில் வைரஸ் காய்ச்சல் பரவி வருகின்றது.
மருத்துவமனைகளில் அதிகம் பேர் புறநோயாளிகளாக வருகின்றனர். ஆகவே மக்கள்
எச்சரிக்கையாக இருக்க வேண்டும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. அதிக மருந்துகளும் எடுத்துக்கொள்ள வேண்டாம். மருத்துவரின் அறிவுரையை பின்பற்ற வேண்டும். இந்த இன்புளுயன்சா என்ற வைரஸ் நோய் காற்றில் தான் பரவுகின்றது. ஆகவே பொது இடங்கள் கூட்டம் மிகுந்த இடங்களில் முகக்கவசம் அணிவது நல்லது என்றார்.


இதையும் படிக்க: தமிழ்நாடு முதலமைச்சரை சந்திக்க எனக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை – சிராக் பஸ்வான்

தொடர்ந்து, வட மாநில தொழிலாளர்கள் விவகாரம் குறித்து பேசிய தமிழிசை, வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் மிகவும் ஜாக்கிரதையாக கையாள வேண்டும். வந்தாரை வாழவைக்கும் தமிழகம் மற்றும் புதுச்சேரி. இதில் நாம் இந்தியாவில் உள்ள எல்லோரையும் சகோதரத்துவத்தோடு தான் பார்க்க வேண்டும். நம் மாநிலத்தை சேர்ந்தவர்களும் பிறமாநிலத்தில் பணியாற்றுகின்றானர்.

சகோதரத்துவத்தோடு மொழி மாநில எல்லைகள் கடந்து அன்போடு பழகும்போது தான் இந்த வேறுபாடுகள் வராது. நமக்கு அது வதந்தியா இல்லையா என்பது எனக்கு தெரியாது. ஆனால், அச்சத்தோடு இருக்கின்றார்கள். தமிழகத்தையும் சரி பிறமாநிலத்தையும் விட்டு போகின்றார்கள் என்று சொல்வது சரியான நடவடிக்கையாக இருக்காது. அதனால், என்ன கொள்கை வேற்றுமைகள் இருந்தாலும், மொழி வேற்றுமைகள் இருந்தாலும் அனைவரும் இந்திய தேசத்தை சேர்ந்தவர்கள் என்ற உணர்வோடு செயல்படவேண்டும் என்றார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.