முக்கியச் செய்திகள் தமிழகம்

வடகிழக்கு பருவமழை; சென்னையில் பாதுகாப்பு ஒத்திகை

வானகரத்தில், வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு மழைக் காலத்தில் மக்கள் தங்களை காத்துக் கொள்வது தொடர்பான செய்முறை பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

சென்னை மதுரவாயல் அடுத்த வானகரம் முருகன் கோவில் தெப்பக்குளத்தில், வரவிருக்கும் வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, மழைக் காலத்தில் பொதுமக்கள் எவ்வாறு செயல்பட வேண்டும், தண்ணீர் பகுதிகள் மற்றும் வெள்ளம் ஏற்பட்டால் மக்கள் தங்களை எவ்வாறு காத்துக் கொள்ள வேண்டும் என்பது தொடர்பான செய்முறை பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மத்திய சென்னை மாவட்ட அலுவலர் சரவணன் உத்தரவின் பேரில், கோயம்பேடு தீயணைப்பு காவல் நியமன அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் கோயம்பேடு மதுரவாயல் தீயணைப்பு துறையைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு ஒத்திகையை பொதுமக்களுக்குச் செய்து காண்பித்தனர்.

மழைநீர் வெள்ளம் ஏற்பட்டு தண்ணீர் தேங்கினால், வீட்டில் உள்ள சிறிய வாட்டர் கேன், பெரிய தண்ணீர் கேன் மற்றும் பிளாஸ்டிக் டிரம்களை பயன்படுத்தி, எவ்வாறு உதவிகள் கிடைப்பதற்கு முன்பாக தங்களை காத்து கொள்ள வேண்டும் எனவும், வெள்ளத்தில் யாராவது சிக்கிக் கொண்டால் அவர்களை மீட்டு முதலுதவி எப்படி அளிக்க வேண்டும் என்றும் செTamilnadu Fire and Rescue Servicesய்து காண்பிக்கப்பட்டது.

இதுகுறித்து தீயணைப்புத்துறை அதிகாரிகள் கூறுகையில், “வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிகளவில் மழைநீர் தேங்கும் பகுதிகளில், மழைநீர் மற்றும் வெள்ளம் ஏற்பட்டால் எப்படி தங்களை காத்துக் கொள்ள வேண்டும் என பாதுகாப்பு விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தினோம். மேலும் அனைத்து பகுதிகளுக்கும் நேரடியாகச் சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம்” என்று தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் மதுரவாயல் வானகரம் பகுதியை சுற்றியுள்ள ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இலங்கைக்கு இந்தியா ரூ.14,643 கோடி கடன்: ஜெய்சங்கர்

Mohan Dass

பெகாசஸ் விவகாரம் இந்திய ஜனநாயகத்தை நசுக்கும் முயற்சி: ராகுல் காந்தி

Halley Karthik

63 நாணயங்களை விழுங்கிய நபர்-அறுவை சிகிச்சை மூலம் அகற்றிய அரசு மருத்துவர்கள்

Web Editor