நிலத்தடி சுரங்கப்பாதையுடன் கூடிய பகட்டான பட்டு மாளிகை என இளவரசி போன்று வடகொரிய அதிபர் கிம் ஜான் உன்னின் மகள் வளர்ந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
வடகொரியாவின் பியோங்யாங் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த வாரம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை அந்நாட்டு அரசு சோதனை செய்தது. அப்போது, அதிபர் கிம் ஜாங் உன்னின் மகள் பொதுவெளியில் முதன்முறையாக தோன்றினார். தந்தையுடன் உரையாடியபடி நெருக்கமாக அவர் நடந்து சென்ற காட்சி அதில் இடம்பெற்றது. 9 வயதான அவருடைய பெயர் ஜு ஏயி (Ju Ae) என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
இதையடுத்து, வடகொரிய அதிபரின் குழந்தைகள் தொடர்பாக பல்வேறு தகவல்கள் உலா வர தொடங்கியுள்ளன. அந்த வகையில், காங்வோன் மாகாணத்தின் வொன்சானில் உள்ள கடற்கரை சொகுசு வில்லாவில் தனது உடன்பிறப்புகளுடன் அவர் வசித்து வருவதாக நியூயார்க் போஸ்ட் தெரிவித்துள்ளது.
நீர்ச்சருக்கு விளையாட்டுடன் கூடிய நீச்சல் குளங்கள், டென்னிஸ் மைதானம், கால்பந்து மைதானம், பொழுதுபோக்கு பூங்கா உள்ளிட்டவை அனைத்து வசதிகளும் அந்த வில்லாவில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. கிம் ஜாங் உன்னிற்கு நாடு முழுவதும் 15க்கும் மேற்பட்ட பட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட பங்களாக்கள் உள்ளன என்றும் அங்கு அவரின் மகள் சென்று வர தனித்தனியே சுரங்க பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் நியூயார்க் போஸ்ட் தெரிவித்துள்ளது.
வெளியுலகிற்கு சர்வதிகாரியாக கருதப்படும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், தனது குழந்தைகளுக்கு பாசக்கார தந்தையாகவே உள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.







