முக்கியச் செய்திகள் தமிழகம்

“2024-ம் ஆண்டு தமிழ்நாட்டில் இருந்து அதிக பாராளுமன்ற உறுப்பினர்கள் வருவார்கள்”

2024-ம் ஆண்டு மீண்டும் மத்தியில் பாஜக ஆட்சி அமையும் என்றும், அப்போது தமிழ்நாட்டில் இருந்து அதிக பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப் படுவார்கள் என்றும் பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம் தெரிவித்துள்ளார்.

 

பல்லாவரத்தில் பிரதமர் நரேந்திரமோடியின் 8 ஆண்டு கால சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு செங்கல்பட்டு மாவட்ட பாஜக தலைவர் வேதசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம், தமிழ்நாட்டில் திமுக அரசு பதவியேற்று ஓராண்டு காலத்தில் சொல்லகூடிய வகையில் எந்த சாதனையும் செய்யவில்லை என குற்றம்சாட்டினார். வெறும் ஸ்டிக்கர் ஒட்டும் ஆட்சியாக, அரசாக தான் திமுக செயல்படுகிறது என்றார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 

ஆனால் 8 ஆண்டில் பாஜக தினமும் தூங்கி எழுந்தால் ஒரு புதிய சாதனையை பிரதமர் மோடி படைத்துவருவதாக பெருமிதம் தெரிவித்தார். தமிழ்நாட்டில் உள்ள கோயில்களின் 13 சிலைகளை கூட பிரதமர் மோடி தான் மீட்டு கொடுத்துள்ளர் என அவர் தெரிவித்தார். தமிழ்நாட்டிற்கு வருகிற மத்திய அரசின் திட்டங்களை திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டி அவர்களின் சாதனையாக காட்டி வருவதாக சாடினார்.

 

தமிழ்நாட்டின் உண்மையான எதிர்கட்சியாக பாஜக செயல்பட்டு வருகிறது என தெரிவித்த வினோஜ் பி.செல்வம், நிச்சயமாக 2024-ம் ஆண்டு மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி அமைக்கும் என்றும் அப்போது, தமிழ்நாட்டில் இருந்து அதிக பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

+2 பொதுத் தேர்வு: கள்ளக்குறிச்சியில் 10% மாணவர்கள் ‘ஆப்சென்ட்’

Web Editor

மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றிணைய வேண்டும்-கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

Web Editor

யோகிபாபு நடித்துள்ள ”இரும்பன்” பட இயக்குனரின் சம்பள நிலுவை வழக்கு – படத்திற்கு தடை..?

Web Editor