சென்னை தரமணி பகுதியில் தங்கியிருந்து வேலை தேடி வந்த பிகாரைச் சேர்ந்த தொழிலாளி கௌரவ்குமாா் (24), அவரது மனைவி முனிதா குமாரி (21), அவர்களது 2 வயது மகன் பிர்மணி குமாா் ஆகியோர் கடந்த 25-ஆம் தேதி கொலை செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கௌரவ்குமார் குடும்பத்தை கொலை செய்ததாக பிகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையின் படி , கெளரவ்குமார் சடலம் இந்திரா நகர் முதலாவது அவென்யுவில் ஒரு சாக்கு மூட்டையிலும், பிர்மணிகுமாா் சடலம் இந்திரா நகா் ரயில் நிலையத்தின் பின்புறம் செல்லும் பக்கிங்ஹாம் கால்வாயில் ஓரத்திலும் மீட்கப்பட்டன.
தொடர்ந்து பெருங்குடி குப்பை கிடங்கில் முனிதா குமாரி சடலத்தை தேடும் பணி இரு நாள்களாக நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் 3-ஆவது நாளாக இன்று பெருங்குடி குப்பை கிடங்கில் காவல் துறையினர் மேற்கொண்ட தேடுதல் பணியில் முனிதா குமாரியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.







