முக்கியச் செய்திகள் உலகம்

அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு

இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அலெஸ் பியாலியாட்ஸ்கிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரஷ்யா மற்றும் உக்ரைனைச் சார்ந்த இரண்டு அமைப்புகளுக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவியல், இலக்கியம், இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், வேதியியல் முதலிய பிரிவுகளில் சிறந்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வருகிறது. அமைதிக்கான நோபல் பரிசு நார்வேயிலும், மற்ற பிரிவுக்கான நோபல் பரிசு ஸ்டாக்ஹோமிலும் அறிவிக்கப்படுகின்றன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு ஸ்வாண்டே பாபோவுக்கு அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து இயற்பியலுக்கான நோபல் பரிசு ஆலன் ஏஸ்பெக்ட், ஜான் எஃப்.கிளாசர், ஆண்டன் ஜெய்லிங்கர் ஆகிய மூவருக்கு அறிவிக்கப்பட்டது. வேதியியலுக்கான நோபல் பரிசு கரோலின் ஆர்.பெர்டோஸி, மோர்டன் மெல்டல் மற்றும் கே.பாரி ஷார்ப்லெஸ் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது. நேற்று இலக்கியத்திற்கான நோபல் பரிசு பிரெஞ்சு எழுத்தாளர் ஆனி எர்னாக்ஸுக்கு அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு பெலாரஸ்ஸைச் சேர்ந்த மனித உரிமை வழக்கறிஞர் அலெஸ் பியாலியாட்ஸ்கிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அமைதிக்கான நோபல் பரிசின் இறுதிப் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த மூவர் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த ஆண்டிற்கான நோபல் பரிசு, ரஷ்யாவின் மெமோரியல் அமைப்பு மற்றும் உக்ரைனின் சிவில் உரிமைகளுக்கான மையம் ஆகிய இரண்டு அமைப்புகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மனிதநேய மதிப்புகள் அறிந்து செயல்படுதல், ராணுவ செயல்பாடுகளைத் தடுத்தல் உள்ளிட்ட காரணங்களுக்காக இந்த ஆண்டிற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram