முக்கியச் செய்திகள் தமிழகம்

கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் எதுவும் மாயமாகவில்லை – தமிழக அரசு

கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் எதுவும் மாயமாகவில்லை என தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை, சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளது.

1985-1987ம் ஆண்டு 5.25 லட்சம் ஏக்கர் நிலங்கள் இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமாக இருந்ததாக தமிழ்நாடு அரசு கூறிய நிலையில், 2018-2019ல் 4.78 லட்சம் ஏக்கர் என கூறியதால் காணமல் போன நிலத்தை கண்டுபிடிக்க உத்தரவிடக்கோரி திருத்தொண்டர்கள் சபை நிறுவனர் ஆ.ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது, அப்போது 2019-2020ஆம் ஆண்டு கொள்கை விளக்கக் குறிப்பில், கட்டிடங்கள் அமைந்துள்ள நிலம் மற்றும் காலியிடங்களின் விவரங்கள் குறிப்பிடப்படாததால், ஏக்கர் குறைந்துள்ளதே தவிர, நிலம் எதுவும் மாயமாகவில்லை என இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்தது.

மேலும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் நில விவரங்களை ஆவணங்களுடன் தாக்கல் செய்ய, செயல் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் பணிகளை முடித்து, விரிவான அறிக்கை தாக்கல் செய்ய ஆறு மாத கால அவகாசம் தேவை என்றும் அறநிலைத்துறை கோரியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தமிழ்நாடு முழுவதும் 10,000 குடியிருப்புகள் இடிக்க ஏற்பாடு- அமைச்சர் முத்துசாமி

Vel Prasanth

அடுக்குமாடி குடியிருப்பு திருத்தச் சட்டம்; தமிழ்நாடு அரசு முடிவு

G SaravanaKumar

கோவில்களை இடிப்பதுதான் திராவிட மாடலா? – பாஜக பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி

Web Editor