திருநெல்வேலியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “முதலமைச்சர் அவரது கூட்டணிக்காக கூட்டணி ஆட்சி சரிவராது என சொல்லியிருக்கிறார். தேசிய ஜனநாயக கூட்டணி 200 இடங்களில் வெற்றி பெறும். காங்கிரஸ் கட்சி, திமுக கூட்டணியில் தொடருமா அல்லது விஜய் கட்சியுடன் இணையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கனிமொழி, காங்கிரஸ் உடன் தொடர்ந்து பேசி வருவதாக சொல்கிறார்கள். திமுக கூட்டணியில் தான் குழப்பம் உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக உள்ளது.
திமுகவில் ஏமாற்று வேலை அதிகமாக உள்ளது. நாளைக்கே முதலமைச்சர் ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என நினைத்து பேசுகிறார். ஆனால் குடும்ப ஆட்சி ஒருபோதும் மீண்டும் ஆட்சிக்கு வராது. தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தான்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் பெரும்பான்மையில் யார் இருக்கிறார்களோ அவர்கள் தான் முதல்வர். திருநெல்வேலி தொகுதியில் நான் எடுத்த கருத்து கணிப்பில் கூடுதலாக எனக்கு 20% வாக்குகள் அதிகரித்துள்ளது.
அதுபோல் ராதாபுரம் தொகுதி போன்ற இடங்களிலும் தேஜகூ அதிக வாக்குகள் வந்துள்ளது. திமுக தோல்வி பயத்தால் மத்திய அரசிடம் இருந்து பணம் வரவில்லை என சொல்லி வருகிறது. கஞ்சா அதிகம் விற்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது. சிந்தடிக் போதை பொருள் விற்பனையில் அதிகரித்துள்ளது. கூட்டணி ஆட்சி போன்ற எந்த டிமேண்ட்டும் எங்களிடம் கிடையாது. தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பது ஒன்றே எங்கள் லட்சியம்.
தேமுதிக சுதிஸ் உடன் கூட்டணி குறித்த எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. ஆளுநர் தேநீர் விருந்தில் கலந்து கொண்ட போதும் சுதிசுடன் நட்பு ரீதியிலாக மட்டுமே பேச்சு வார்த்தை நடைபெற்றது என்றும் கூட்டணி குறித்து அவரிடம் பேசவில்லை. நான் குருஜி என அழைக்கும் செங்கோட்டையன் முதலில் கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் வெற்றி பெறுவாரா என பார்ப்போம் என்று தெரிவித்துள்ளார்.







