முக்கியச் செய்திகள் உலகம்

“இரட்டை கோபுர தாக்குதலில் பின்லேடனுக்கு தொடர்பு இல்லை”- தலிபான்

அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதல் சம்பவத்தில் ஒசாமா பின்லேடன் மூளையாக செயல்பட்டதற்கு எவ்வித ஆதாரமும் இல்லையென தலிபான் தற்போது கூறியுள்ளது.

அமெரிக்க இரட்டை கோபுரம் தாக்குதல் நடந்து சுமார் 20 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது வரை இந்த தாக்குதல் சம்பவத்தில் ஒசாமா பின்லேடன் ஈடுபட்டதற்கான ஆதாரம் ஏதும் இல்லையென தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிபுல்லா முஜாஹித் கூறியுள்ளார். மேலும், இந்த குற்றச்சாட்டின் பின்னணியில் எவ்வித முகாந்திரமும் இல்லையென்றும் ஆப்கன் மீதான போருக்கு இந்த சம்பவம் ஒரு சாக்காக பயன்படுத்தப்பட்டதாகவும் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், “அமெரிக்கர்களுக்கு லேடன் இடையூராக கருதப்பட்டபோது அவர் ஆப்கனில்தான் இருந்தார். ஆனால், அவரும், இந்த ஆப்கன் மண்ணும் எவர் ஒருவருக்கும் எதிரியாக செயல்படவில்லை.” என்றும்,பெண்களின் உரிமைகள் குறித்த கேள்விக்கு, “பெண்களை நாங்கள் மதிக்கின்றோம். அவர்கள் எங்களின் சகோதரிகள். அவர்கள் பயப்படக்கூடாது. நாங்கள் தேசத்திற்காக போராடியுள்ளோம். அவர்கள் இதை நினைத்து பெருமைப்பட வேண்டும்.” என்றும் கூறியுள்ளார்.

முன்னதாக ஆகஸ்ட் 31க்குள் அமெரிக்க படைகள் ஆப்கனிலிருந்து வெளியேறும் என அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
SHARE

Related posts

தேர்தல் பரப்புரையை ரத்து செய்த மமதா பானர்ஜி!

Halley karthi

அரை சதம் விளாசிய கில்: 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது கொல்கத்தா

Halley karthi

இடி, மின்னல் தாக்கி பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து

Saravana Kumar