ஆசிரியர் தேர்வு தமிழகம்

“பெட்ரோல் டீசல் மீதான மாநில வரியை தமிழக அரசு குறைக்க வாய்ப்பே இல்லை” – அமைச்சர் பாண்டியராஜன்

பெட்ரோல் டீசல் மீதான மாநில வரியால் தமிழகத்திற்க்கு பெரும் வருவாய் கிடைப்பதால், விலையைக் குறைக்க வாய்ப்பே இல்லை என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பெட்ரோல், டீசலின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்றைய நிலவரத்தின்படி பெட்ரோல் லிட்டர் ரூ.92.59க்கும், டீசல் விலை 85.98க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதை பற்றி மத்திய அரசுடன் மாநில அரசுகள் ஆலோசிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய , அமைச்சர் பாண்டியராஜன் காங்கிரஸ் ஆட்சியில் நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் தான், எண்ணெய் நிறுவனங்களே விலை நிர்ணயம் செய்துகொள்ளாம் என அனுமதியளித்தார். அதனை தான் தற்போதைய மத்திய அரசு தொடர்ந்து வருகிறது. தொடர்ந்து பேசிய அவர், பெட்ரோல் டீசல் வரியால் தான் தமிழகத்திற்க்கு பெரும் வருவாய் கிடைக்கிறது. அதனால், அதனை குறைத்து விலையைக் குறைக்க வாய்ப்பே இல்லை என்று தெரிவித்தார். மேலும், பெட்ரோல் டீசலில் மத்திய அரசுக்கு மட்டுமே அதிக லாபம் கிடைப்பதால் விலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என அமைச்சர் பாண்டியராஜன் கேட்டுக்கொண்டார்.

Advertisement:
SHARE

Related posts

டாஸ்மாக் கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்க உரிமை உண்டு: உயர் நீதிமன்றம்

Ezhilarasan

மதக் கலவரம் செய்ய திட்டமிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: எல்.முருகன்

Saravana

4 நாட்களுக்கு மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

Ezhilarasan