முக்கியச் செய்திகள் இந்தியா

‘யுபிஐ சேவைகளுக்குக் கட்டணம் வசூலிக்கும் திட்டம் இல்லை’ – மத்திய நிதி அமைச்சகம்

ஆன்லைன் பணப் பரிவர்த்தனை எனப்படும் யு.பி.ஐ சேவைகளுக்கு எந்த விதக் கட்டணமும் வசூலிக்க அரசாங்கத்தில் எந்த விதப் பரிசீலனையும் இல்லை என மத்திய நிதி அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.

வங்கிகள் வழங்கும் டெபிட் , கிரிடிட் கார்டு பரிவர்த்தனைகளைத் தொடர்ந்து அறிமுகப்படுத்தப்பட்ட யுபிஐ பரிவர்த்தனை சேவை பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிறு பெட்டிக் கடைகள் தொடங்க சிறு வியாபாரிகள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை அனைத்திலும் யு.பி.ஐ மூலம் பணம் பெறப்படுகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனால், பொதுமக்கள் ஆன்ட்ராய்டு மொபைல் மூலம் யுபிஐ முறையில் பணப் பரிவர்த்தனையை மேற்கொண்டு வருகின்றனர். நாடு முழுவதும் கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் யுபிஐ மூலம் 600 கோடி ரூபாய் பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ஆன்லைன் மூலம் பணப் பரிவர்த்தனை செய்யும் யுபிஐ சேவைகளுக்குக் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாகத் தகவல் பரவியது. இந்த தகவல் பலருக்கும் அச்சத்தை ஏற்படுத்தியது.

அண்மைச் செய்தி: ‘தமிழ்நாட்டில் மேலும் 603 பேருக்கு கொரோனா தொற்று’

இந்நிலையில், யுபிஐ பணப் பரிவர்த்தனை சேவைகளுக்குக் கட்டணம் வசூலிக்கும் எந்த திட்டமும் அரசிடம் இல்லை என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. யுபிஐ சேவையை வழங்கும் நிறுவனங்கள் மற்ற வழிகள் மூலம் செலவுகளை ஈட்டிக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த தகவல் மத்திய நிதி அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ ட்வீட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பும்ரா, சிராஜ் மீது ரசிகர்கள் இனவெறித் தாக்குதல் – இந்திய அணி புகார்

Jayapriya

மகளிர் ஐபிஎல் தொடரை நடத்த தீவிரம் காட்டும் பிசிசிஐ

EZHILARASAN D

10 ரூபாய் நாணயத்தை தயக்கமின்றி உபயோகிக்க வேண்டும்: மத்திய அரசு

Arivazhagan Chinnasamy