முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

அதிகாரத்தைக் கொண்டு யாரையும் மிரட்டக்கூடாது – நீதிபதிகள் கருத்து

விருதுநகர் மாவட்டம் பி.வாகைகுளம் பகுதியில் குவாரி நடத்த விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வழங்கிய உரிமத்தை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த உறங்காப்புலி, ராஜாங்கம் ஆகியோர் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதில்,பால்சாமி என்பவர் விருதுநகர் மாவட்டம், பி.வாகைக்குளம் கிராமத்தில் கிருதுமால் ஆற்றின் கரையிலுள்ள பட்டா நிலத்தில் குவாரி நடத்துவதற்காக உரிமம் பெற்றுள்ளார். குவாரி அமைப்பதற்கு அனுமதி வழங்கும் பொழுது அந்த இடத்திற்கு அருகில் சாலைகள், ரயில் பாதைகள் உள்ளதா, வீடுகள் உள்ளனவா, நீர்நிலைகள் உள்ளனவா, போன்றவற்றை ஆய்வு செய்தே அனுமதி வழங்க வேண்டும். ஆனால், அதுபோன்ற ஆய்வு எதுவும் மேற்கொள்ளாமல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கல்குவாரிக்கு அனுமதி வழங்கிய இடத்தின் அருகே கிருதுமால் நதி உள்ளது. இங்கே குவாரி நடத்துவதற்கான உரிமத்தை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வழங்கியுள்ளார். இது ஏற்கத்தக்கதல்ல இது குறித்து அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவே, கல்குவாரி நடத்த விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வழங்கிய உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கூறியிருந்தனர்.

இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஹேமலதா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், மனுதாரர் வழங்கிய புகாரின் அடிப்படையில் 2022 ஆகஸ்ட் 12ஆம் தேதி ஆர்டிஓ, டிஆர்ஓ, டிஎஸ்பி, ஏடி மைன்ஸ் துணை இயக்குனர் ஆகியோர் குவாரிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். மனிதர்களை கொண்டு குவாரி நடத்த அனுமதி பெற்று ஜே.சி.பி இயந்திரம் பயன்படுத்தியது தெரியவந்தது இதனை அடுத்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் குவாரி உரிமையாளருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். மேலும் குவாரியிலிருந்து மண் எடுத்துச் செல்ல வழங்கப்படும் போக்குவரத்து உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. என தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர் தரப்பில், குவாரி அனுமதி பெற்று அருகிலுள்ள ஆற்றில் இருந்து மணல் எடுப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. எனவே குவாரி உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதிகள், மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரத்தைக் கொண்டு யாரையும் மிரட்டக்கூடாது என்றும் சட்டபூர்வமாக செயல்பட வேண்டும் என கருத்து தெரிவித்தனர். அதோடு குவாரி உரிமம் குறித்து சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

SBI வாடிக்கையாளர்களுக்கு இறுதி வாய்ப்பு

G SaravanaKumar

சூர்யா 41 படத்தின் புதிய அப்டேட்

Vel Prasanth

குவைத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர் உடலை தாயகம் கொண்டு வர வேண்டும் – வைகோ வலியுறுத்தல்

Web Editor