தூத்துக்குடி விமானநிலையத்தில் தமிழிசை செளந்திரராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “தமிழகத்தில் தேர்தல் திருவிழா நடைபெற இருக்கிறது. அது வெற்றிகரமாக அமைய எல்லோருக்கும் வாழ்த்துக்கள். தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பாக நாங்கள் என்றும் இருப்போம்.
தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக யாருக்கும் பாதுகாப்பு இல்லை. விளம்பர ஆட்சி மட்டும் தான் நடக்கின்றது. இந்துக்கள் இந்த ஆட்சியில் புறக்கணிப்பட்டு வருகின்றனர். தமிழ் இன அடையாளத்தை திமுக தொலைத்து வைத்திருக்கின்றது. அதனை நடைபெற இருக்கும் தேர்தலில் மீட்டு எடுப்போம். திருமாவளவன் போன்றோர்கள் நாங்கள் கூட்டணிக்கு நெருக்கடி கொடுக்கிறோம் என்கின்றனர்.
நாங்கள் கூட்டணி குறித்து யாருக்கும் அழுத்தம் நெருக்கடி கொடுக்கவில்லை. திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் மட்டும் சேர்ந்து கூட்டணி அமைத்துள்ளோம். வேறு யாரும் கூட்டணிக்கு வருவார்களா என்று தெரியாது. ஆனால் இப்போது இருக்க கூடிய கூட்டணியை பலமாக இருக்கின்றோம். பாஜக தமிழகத்தில் வந்தால் மதவாதம் மத கலவரம் வந்துவிடும் என பொய்யான குற்றசாட்டுகளை பரப்புகின்றனர்.
அறிவாலயம் பக்கம் மழை வெயிலுக்கு யார் ஒதுங்கினாலும் கூட்டணியில் சேர்க்க நினைக்கின்றது திமுக தலைமை முடிவு செய்தால் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன். பாஜக தேர்தல் அறிக்கையை 19ம் தேதி தலைமை இடம் கொடுக்க உள்ளோம். அதன் பிறகு வெளியிடபடும் என்று தெரிவித்துள்ளார் .







