முதலமைச்சரின் அதிகாரத்தில் யாரும் பங்கு போட முடியாது – பீட்டர் அல்போன்ஸ்

எந்த அமைச்சர் வேண்டும், எந்த அமைச்சருக்கு எந்த துறை ஒதுக்க வேண்டும் என்ற அதிகாரம் முதல் அமைச்சருக்கு மட்டுமே உள்ளதாகவும், அந்த அதிகாரத்தில் யாரும் பங்கு போட முடியாது என தமிழ்நாடு சிறுபான்மை நல…

எந்த அமைச்சர் வேண்டும், எந்த அமைச்சருக்கு எந்த துறை ஒதுக்க வேண்டும் என்ற அதிகாரம் முதல் அமைச்சருக்கு மட்டுமே உள்ளதாகவும், அந்த அதிகாரத்தில் யாரும் பங்கு போட முடியாது என தமிழ்நாடு சிறுபான்மை நல வாரிய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் ஒற்றுமை மேடை மாநாடு என்ற தலைப்பில் மதச்சார்பின்மையை காப்போம் அரசியல் சாசனத்தை காப்போம் என்ற முழக்கத்தோடு சென்னை இராயபுரம் தனியார் திருமண மண்டபத்தில் அனைத்துக் கட்சிகள் மற்றும் அமைப்புகள் கலந்து கொண்ட மாநாடு நடைபெற்றது.

இதில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட், சிபிஐ, சிபிஎம் ,
மனிதநேய மக்கள் கட்சி, சென்னை மக்கள் மேடை உள்ளிட்ட கட்சிகள் கிறிஸ்தவ
திருச்சபை இஸ்லாமியர்கள் அமைப்புக்கள் பங்கேற்றன. சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு சிறுபான்மை நல வாரிய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ராஜேந்திரன் மற்றும் விடுதலை கட்சி வன்னியரசு, சி. பி. ஐ. எம். பெருமாள் கலந்து கொண்டு பேசினார் .

பின்னர் பீட்டர் அல்போன்ஸ் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறியதாவது,
” தமிழக ஆளுநர் அரசில் சாசன சட்டத்தை காலில் மிதிக்கிறார். , இது மிகவும் கவலை
அளிக்கிறது. கூட்டாட்சி தத்துவத்தில் ஆளுநரின் பங்கு மிக முக்கியமானது
ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே உறவு பாலமாக நல்லெண்ண தூதுவராக
இருந்து மாநில அரசின் திட்டங்களுக்கும் செயல்பாடுகளுக்கும் உற்சாகத்தை தர
வேண்டிய ஆளுநர் தொடர்ந்து மாநில அரசின்செயல்பாடுகளில் முடக்குவதில்
தமிழகத்தில் நடக்கும் நல்ல பணிகளை தடுப்பதிலும் வாடிக்கையாக ஈடுபட்டு வருவது
மிகுந்த வருந்தத்தக்கது.

அரசியல் சாசனத்திற்கு விரோதமாக செயல்பட்டு வரும் ஆளுநருக்கு பிரதமரும் உள்துறை
அமைச்சரும் எந்த விதமான அறிவுறுத்தலும் ஆலோசனையும் வழங்காமல் அவரை தொடர்ந்து செயல்பட விடுவது என்பது, அவர்களின் ஒப்புதலை பெற்று ஆளுநர் இவ்வாறு நடந்து கொள்கிறாரா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.  அரசியல் சாசன சட்டத்தில் எந்த அமைச்சர் வேண்டும், எந்த அமைச்சருக்கு எந்த துறை ஒதுக்க வேண்டும் என்ற அதிகாரம் முதல் அமைச்சருக்கு மட்டுமே இருக்கிறது. அந்த அதிகாரத்தை யாரும் பங்கு போட முடியாது.

முதலமைச்சரின் கோரிக்கை ஏற்காமல் நிராகரிப்பது, காலதாமதப்படுத்துவது அரசியல்
சாசன சட்டத்திற்கு ஒவ்வாத மிகப் பெரிய குற்றம் அமைச்சர்களை மாற்ற ஆளுநரின் அனுமதி தேவை இல்லை என்றும், கல்யாணத்துக்கு புரோகிதர் வேண்டும் புரோகிதர் இல்லை என்றாலும் கல்யாணம் நடக்கும். கல்யாணத்துக்கு தேவை பெண்ணும் மாப்பிள்ளையும் தான் புரோகிதர் அல்ல” என பீட்டர் அல்போன்ஸ் கூறினார்.

” பாஜகவின் கூட்டணி கட்சியாக வருமானவரித்துறை அமலாக்கத்துறை சிபிஐ செயல்பட்டு வருவதாக பீட்டர் அல்போன்ஸ் குற்றம்சாட்டினார். மோடி பிரதமர் ஆனது முதல் பிரம்மா, சிவன், விஷ்ணு, போல சிபிஐ, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை
மும்மூர்த்திகளாக செயல்பட்டு வருகிறது. அரசியல் சாசன தன்னாட்சி அமைப்புகள்
எந்தவித அரசியலமைப்பு இல்லாமல் செயல்பட கூடியவர்கள். ஆனால் தற்பொழுது பாஜகவின் கூட்டணி கட்சிகள் போல செயல்படுவதாக குற்றம் சாட்டினார்.

ஒரு மாநிலத்தில் தேர்தல் வந்து விட்டால் எதிர்க்கட்சிகளை முடக்குவது, அவர்களை
செயல்படாமல் விடாமல் அவர்களுடைய , வியாபாரம், தொழில்களை முடக்கும் வேலையை இந்த மூன்று துறைகள் செயல்படுத்தி வருகின்றன. எந்த அமைச்சர் யார் வீட்டில் சோதனை நடத்தப்படுகிறதோ அவர் பாஜகவில் இணைந்தால் மறுநாளே சோதனை நிறுத்தப்படுகிறது. அவர்கள் பரிசுத்தவானாக மாறுகிறார்கள்.அசாம் முதலமைச்சர் காங்கிரஸ் கட்சியில் அமைச்சராக இருந்த பொழுது அமலாக்கத் துறையினர் ஐந்து வழக்குகள் பதிவு செய்தனர். அவர் பாஜகவில் இணைந்ததால் அமலாக்க துறையினர் விசாரணை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பல கோடி மதிப்பிலான ரூபாய் நோட்டுகளோடு இரண்டு கண்டெய்னர்களில் பிடிக்கப்பட்டது. அந்த விவகாரம் என்ன ஆனது? தொழிலதிபர் வீட்டில் 24 கோடி 105 கிலோ தங்கம் பிடித்தனர் அந்த வழக்கு என்ன ஆனது. செந்தில் பாலாஜி திமுகவில் எப்போது இணைந்தாரோ, கட்சியின் அடிப்படை கட்சி வேலைகளை செய்ய ஆரபித்த  நாளிலிருந்து அவர் மீது கண்ணாக இருந்தனர். கொங்கு மண்டலத்தில் பாஜக மற்றும் அதிமுகவிற்கு சவாலாக உள்ள செந்தில் பாலாஜியை முடக்க நினைக்கின்றனர்” என பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.