முக்கியச் செய்திகள் தமிழகம்

யாரும் வரி செலுத்தாமல் தப்பிக்க முடியாது; வருமானவரித்துறை ஆணையர் ரவிச்சந்திரன் எச்சரிக்கை

பணபரிமாற்றம், நிலம் வாங்குதல் போன்றவைகள் வருமானவரி துறையால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதால் வரி செலுத்தாமல் தப்பிக்க முடியாது என முறையாக வரி செலுத்த வேண்டும் என வருமானவரித்துறை ஆணையர் ரவிச்சந்திரன் எச்சரிக்கை.

தமிழ்நாட்டில் வரி செலுத்துவோர் எண்ணிக்கை 30 சதவீதமாக உயர்ந்துள்ளது என
வருமான வரித்துறை ஆணையர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில் முதன்மை தலைமை வருமானவரித்துறை ஆணையர் ரவிச்சந்திரன், செய்தியாளர்களை சந்தித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு வருமான வரி 1 லட்சம் கோடி
கடந்து வசூலானது. இதுவரை 82 ஆயிரம் கோடி வருமான வரி வசூல் செய்யப்பட்டுள்ளது.
வருமான வரி செலுத்துவதில் தமிழ்நாடு 4-வது இடத்தில் உள்ளது என்றும் வரி
செலுத்துவோர் எண்ணிக்கை 30 சதவீதமாக உயர்ந்துள்ளது. TDS 53 சதவீதம்
உயர்ந்துள்ளது என்றும் 4 ஆயிரம் கோடி TDS நிலுவைத்தொகை உள்ளது. TDS
செலுத்தாமல் இருப்பது குற்றம், செலுத்தாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என
எச்சரித்தார்.


வரி செலுத்தாதவர்கள் மீது பொருளாதார குற்றபிரிவு நீதிமன்றத்தில் வழக்கு
தொடர்வோம். இந்தாண்டு இதுவரை 7 வழக்குகளில் நீதிமன்றம் கடுமையான தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. போலியான தகவல் வழங்காமல் வருமான வரியை முறையாக செலுத்த வேண்டும். மீறினால் கடும் நடவடிக்கை என எச்சரிக்கை விடுத்த அவர் வருமான வரி செலுத்துபவர்களுக்கு உள்ள குறைகள் நிவர்த்தி செய்யப்படும் என கூறினார்.

வருமான வரி செலுத்துபவர்களுக்கு Refund வழங்கப்படுகிறது என்றும் கடந்த
வருடத்தை காட்டிலும் இந்தாண்டு 38% வழங்கியுள்ளோம். TDS செலுத்துவதில் முறை
கேடு நடந்துள்ளது என்றும் நிறுவனங்கள் ஊழியர்களின் TDS பிடித்தம் செய்யப்பட்டு
உடனே அரசுக்கு செலுத்த வேண்டும், வேறு காரணத்திற்காக பயன்படுத்த கூடாது என
தெரிவித்தார்.

தமிழகத்தில் 30 லட்சத்திற்கு மேல் இடம் வாங்கினால், 10 லட்சத்திற்கு மேல்
வங்கியில் வைப்புத்தொகை வைத்திருத்தல், 2 லட்சத்திற்கு மேல் பணப்பரிமாற்றம்
உள்ளிட்ட கணக்குகள் பான் கார்டு மற்றும் ஆதார் இணைக்கப்பட்டிருப்பதால் வருமான
வரித்துறையால் தகவல் சேகரிக்கப்படும். தகவல்கள் அனைத்தும் சேகரிக்கப்படுவதால்
வரி செலுத்தாமல் தப்பிக்க முடியாது. வெளிநாடுகளில் கருப்பு பணம் பதுக்கி
வைத்திருந்தால் தொடர்ப்புடைய நாடுகளே வருமானவரித்துறைக்கு தகவல்களை
வழங்குகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

“நீட் தேர்வு தடைச் சட்டத்தை தமிழ்நாடு அரசு இயற்ற வேண்டும்” – திருமாவளவன்

Jeba Arul Robinson

கல்வெட்டு ஆய்வாளர்களை புதிதாக நியமியுங்கள்; மதுரை எம்.பி கோரிக்கை!

Halley Karthik

சிகிச்சை முடித்து மீண்டும் படப்பிடிப்பிற்கு…

Halley Karthik