கொரோனா பாதுகாப்பு உடை அணிந்து செவிலியர்கள் பேரணி– கைது செய்த காவல்துறை

சென்னையில் இன்று கொரோனா பாதுகாப்பு உடை அணிந்து கோட்டை நோக்கி பேரணி நடத்திய எம்ஆர்பி கோவிட் செவிலியர்களை காவல்துறை கைது செய்தனர். தமிழ்நாட்டில் கொரோனா பரவல் தீவிரமாக இருந்த காலத்தில் அரசு மருத்துவமனைகளில் 2000க்கும்…

சென்னையில் இன்று கொரோனா பாதுகாப்பு உடை அணிந்து கோட்டை நோக்கி பேரணி நடத்திய எம்ஆர்பி கோவிட் செவிலியர்களை காவல்துறை கைது செய்தனர்.

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் தீவிரமாக இருந்த காலத்தில் அரசு மருத்துவமனைகளில் 2000க்கும் மேற்பட்ட செவிலியர்கள் ரூ.14,000 மாத சம்பளத்தில் தற்காலிக முறையில் பணி அமர்த்தப்பட்டனர். இந்நிலையில் கடந்த 30ம் தேதி டிசம்பர் மாதம் எம்ஆர்பி கோவில் 2,472 தற்காலிக செவிலியர்களை பணியில் இருந்து விடுவித்து சுகாதாரத் துறையின் சார்பில் அரசாணை பிறபிக்கப்பட்டிருந்தது.

மேலும் அதற்கு பதிலாக அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணி வழங்கப்படும்
என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த பணியானது ஒவ்வொரு 11 மாதத்திற்கும் ஒருமுறை சர்வீஸ் பிரேக் அப் செய்து நிரந்தரமாக தற்காலிக ஊழியர்கள் ஆகவே இருக்க முடியும் என்று தெரிவித்துள்ளனர்.

பணி நீக்கம் செய்யப்பட்ட செவிலியர்களுக்கு பணி பாதுகாப்புடன் கூடிய நிரந்தர பணி வழங்க கோரி செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்த நிலையில் செவிலியர்களின் போராட்டம் 12வது நாளாக இன்று தொடர்கிறது.

போராட்டத்தின் தொடர்ச்சியாக இன்று கொரோனா பாதுகாப்பு உடை அணிந்து விழிப்புணர்வு பேரணி நடத்தினர். எழும்பூர் ரமடா ஹோட்டல் அருகே தொடங்கிய பேரணி ராஜரத்தினம் மைதானம் அருகில் வந்தடைந்தது. கோட்டையை நோக்கி பேரணி நடத்திய எம்ஆர்பி கோவிட் செவிலியர்களை ராஜரத்தினம் மைதானம் அருகே தடுத்து நிறுத்தப்பட்டு  காவல்துறையினர் கைது செய்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.