டெல்டா பிளஸ் வைரஸ் குறித்து அச்சப்பட தேவையில்லை: மா.சுப்பிரமணியன்

டெல்டா பிளஸ் வைரஸ் குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கவியரசு கண்ணதாசனின் பிறந்த நாளையொட்டி சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த…

டெல்டா பிளஸ் வைரஸ் குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கவியரசு கண்ணதாசனின் பிறந்த நாளையொட்டி சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த புகைப்படத்திற்கு அமைச்சர்கள் மா.சுப்ரமணியன், தங்கம் தென்னரசு, ரகுபதி, பெரியகருப்பன், பி.கே. சேகர்பாபு, சாமிநாதன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நால்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னையில் டெல்டா பிளஸ் வகை தொற்றால் பாதிக்கப்பட்ட செவிலியர் நலமாக இருப்பதாகக் கூறினார். இந்த வகை தொற்று வீரியமிக்கது என்றாலும், தொடர் கண்காணிப்பு மற்றும் சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும் என்பதால், மக்கள் அச்சப்பட தேவையில்லை என குறிப்பிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.