காவிரி – கோதாவரி இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்: அமைச்சர் துரைமுருகன்

திமுக ஆட்சியில் காவிரி – கோதாவரி இணைப்புத் திட்டம் நிச்சயம் செயல்படுத்தப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தின்போது பேசிய எதிர்க்கட்சித்…

திமுக ஆட்சியில் காவிரி – கோதாவரி இணைப்புத் திட்டம் நிச்சயம் செயல்படுத்தப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தின்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, திமுக தேர்தல் அறிக்கையில் மட்டுமின்றி, ஆளுநர் உரையிலும் தமிழகத்திற்கு நலன் பயக்கும் பல முக்கியத் திட்டங்கள் இடம்பெறவில்லை என குறை கூறினார். அதற்கு பதிலளித்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், காவிரி – கோதாவரி நதிநீர் இணைப்பு திட்டம் கடந்த ஆட்சியில் நிறைவேற்றாமல் விடப்பட்டதாக தெரிவித்தார்.

மாநிலத்திற்குள் இருக்கும் ஆறுகளை இணைக்க அதிமுக அரசு தவறிவிட்ட நிலையில், மாநிலங்களுக்கிடையே ஆறுகளை இணைக்க ஆலோசனை வழங்குவதா? எனவும் அவர் கேள்வி எழுப்பினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் காவிரி – கோதாவரி இணைப்புத் திட்டம் நிச்சயம் செயல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும் கிருஷ்ணா நதிநீர் திட்டம் எம்ஜிஆர் ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்டாலும், கருணாநிதி ஆட்சியில் நிறைவு பெற்றதாக எதிர்க்கட்சி துணை தலைவர் ஓபிஎஸ்ஸின் மற்றொரு கேள்விக்கு அமைச்சர் துரைமுருகன் பதிலளித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.