முக்கியச் செய்திகள் லைப் ஸ்டைல்

முகப்பொலிவுக்கு இனி கிரீம் வேண்டாம்! வந்துவிட்டது இயற்கை தீர்வு

முகம் மற்றும் சரும பிரச்னைகளை நீக்க கற்றாழையின் பயன்பாடுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

கற்றாழை 

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கற்றாழை மருந்துப் பொருளாகவும், அழகு சாதனப் பொருளாகவும் பயன்படுகிறது. முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்கி, முகம் பளிச்சிடவும் கற்றாழையில் உள்ள ஜெல் போன்ற திரவம் பயன்படுகிறது. கற்றாழையின் இலையிலிருந்து எடுக்கப்படும் ஜெல் சருமத்திற்கு பாதுகாப்பதாக கருதப்படுகிறது.

சரும பிரச்னைகள் அனைத்திற்கும் கற்றாழை ஒரு தீர்வாக விளங்குகிறது. எந்த வகையான சருமமாக இருந்தாலும் சோற்றுக் கற்றாழையை நாம் பயன்படுத்தலாம். சூரிய ஒளியில் ஏற்படும் கருமை நிறத்தை சரிசெய்ய கற்றாழை பெருமளவில் உதவுகிறது. மேலும் இதில் இயற்கையிலேயே ஈரப்பதம் நிறைந்திருப்பதால் சருமத்தை எளிதில் குணப்படுத்துகிறது.

முகப்பொலிவிழப்பதற்கான காரணங்கள்

தோல் ,  கர்பப்பை ,  குடல் மற்றும்  வயிறு ஆகிய வற்றில்  பிரச்சனைகள் இருந்தால் முகம் பொலிவிழந்து காணப்படும். செரிமானக் கோளாறு, மலக்கட்டு, நெத்தி மற்றும் கண்களை சுற்றி  கருப்பாக இருத்தல்,  வயிற்றில் பூச்சி போன்ற காரணங்களால் முகம் பொலிவிழக்கும்.

முகம் பொலிவுற வேண்டும் என்று கடைகளில் கிடைக்கும் கெமிக்கல் சேர்ந்த கிரீம்களை முகத்தில் பூசுவதன் மூலம் பலவித பக்க விளைவுகள் ஏற்படுவதோடு, சருமத்தின் தன்மையும் மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகாமாக இருக்கிறது.

முகம் பொலிவுற கற்றாழையின் பயன்பாடுகள்:

கற்றாழையின் முட்பகுதியை நீக்கிய பின், அதன் தோல் பகுதியை முழுமையாக நீக்க வேண்டும். பின்னர் அந்த ஜெல் போன்ற பகுதியை நல்ல நீரில் 2 முறை கழுவ வேண்டும். பின்னர் அதனை மிக்சியில் அரைத்து அந்த ஜெல்லை முகத்தில் தடவி விட்டு 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.

இதேபோல் கற்றாழையின் ஜெல் பகுதியை எடுத்து மிக்சியில் அரைத்து அதனை ஐஸ் டிரேயில் ஊற்றி ஐஸ்கட்டிகளாக்க வேண்டும். இந்த ஐஸ்கட்டிகளை வைத்து தினமும் 5 முதல் 10 நிமிடம் வரை முகத்திற்கு மசாஜ் செய்து வந்தால் முகத்தில் உள்ள குழிகள் மறையும். முகம் பொலிவுறும்.

கற்றாழை ஜெல் மற்றும் பாதாம் ஆயில் சேர்த்து முகத்திற்கு மசாஜ் செய்து வர முகத்தில் உள்ள மருக்கள், கரும்புள்ளிகள் மறையும்.

கற்றாழை ஜெல்லை, இளநீருடன் சேர்த்து தினமும் குடித்து வர உடல்சூடு தணிந்து புத்துணர்ச்சி கிடைப்பதோடு முகமும் பொலிவுறும்.

தினமும் இரவில் கற்றாழை ஜெல்லை முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தடவி மசாஜ் செய்து அப்படியே தூங்க வேண்டும். காலையில் எழுந்து நல்ல நீரில் முகத்தை கழுவி வர முகத்தில் உள்ள மாசு மருக்கள் நீங்கி, முகம் பளபளக்கும்.

வெளியில் செல்வதற்கு முன் கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவுவதன் மூலம் சருமம் சூரிய ஒளியிலிருந்து பாதுகாக்கப்படுவதோடு, ஈரதன்மையுடன், பொலிவாக காணப்படும்.

இவ்வளவு நன்மைகளை கொட்டி கிடக்கும் அருமருந்தாக விளங்கும் கற்றாழையை பயன்படுத்தினால் நம் அனைவரின் சருமங்களும் புதுப்பொலிவுடன்  ஜொலிக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

– ஜெயஷீபா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்கு பொருத்தி சாதனை

G SaravanaKumar

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதியில்லை

Halley Karthik

தமிழ் மொழி கட்டாயமில்லை என்பதால் சான்றிதழ் சரிப்பார்ப்பில் குவிந்த வெளிமாநிலத்தவர்கள்

Web Editor