சிலிண்டருக்கான டெபாசிட் கட்டணம் அதிகரிப்பு

வீட்டு உபயோக சிலிண்டருக்கான டெபாசிட் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கி எரிவாயு சிலிண்டர் இணைப்புக்கான கட்டணம் ரூ.750 அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதன் மூலம்…

வீட்டு உபயோக சிலிண்டருக்கான டெபாசிட் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கி எரிவாயு சிலிண்டர் இணைப்புக்கான கட்டணம் ரூ.750 அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இதன் மூலம் புதியதாக ஒரு சிலிண்டர் இணைப்பை பெறுவதற்கான டெபாசிட் கட்டணமானது ரூ.1,450லிருந்து ரூ.2,200ஆகவும், 2 சிலிண்டர் பெறுவதற்கான டெபாசிட் கட்டணம் ரூ.2,900லிருந்து ரூ.4,600ஆக உயர்ந்திருக்கிறது. இதேபோல ரெகுலேட்டர் கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

14.2 கிலோ சிலிண்டர் மட்டுமல்லாது, 5 கிலோ எடை கொண்ட சிறிய சமையல் சிலிண்டருக்கான வைப்புத் தொகையும் ரூ.800லிருந்து ரூ.1,150 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வுகள் நாளை முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரெகுலேட்டர் விலையை பொறுத்த அளவில், ரூ.150லிருந்து, ரூ.250ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலையுயர்வுகள் உஜ்வாலா திட்டத்தின் கீழ் இணைப்பு பெறும் பயனாளிகளுக்கு ஏற்கெனவே இருக்கும் நடைமுறையே தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2012ல் சிலிண்டர் இணைப்பை பெறுவதற்கு டெபாசிட் முறையை அப்போதைய காங்கிரஸ் அரசாங்கம் கொண்டு வந்தது. இதனை பாஜக கடுமையாக எதிர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த மே மாதத்தில் மட்டும் வீட்டு உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டர் விலையானது இரண்டு முறை உயர்த்தப்பட்டு ரூ.1,000 கடந்த நிலையில் தற்போது டெபாசிட் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ள சம்பவம் பயனாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.