மதம் தொடர்பான ஆடைகளை பள்ளிகளுக்கு அணிந்து செல்லக்கூடாது என்று பாஜக தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளர் குஷ்பூ தெரிவித்துள்ளார்.
நகர்புற உள்ளாட்சி தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் நிலையில் கட்சித் தலைவர்கள் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் சென்னை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து குஷ்பூ, வள்ளுவர் கோட்டம் அருகே வைகுண்டபுரம் பகுதியில் பரப்புரை மேற்கொண்டார்.

அப்பகுதி மக்களிடம் தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்ட பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் யாரையும் நம்பி பாஜக இல்லை என்றும், நகர்ப்புற தேர்தலில் பாஜக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்தார்.
கர்நாடக மாநிலத்தில் மாணவர்கள் ஹிஜாப் அணிவதை எதிர்த்து போராட்டம் செய்வது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது ஹிஜாபோ, காவித்துண்டோ, நீலத்துண்டோ எதுவும் பள்ளிக்குள் அணிந்து செல்லக்கூடாது என தெரிவித்த குஷ்பூ, மாணவர்கள் சீருடைதான் அணிந்து செல்ல வேண்டும் என கூறினார்







