முக்கியச் செய்திகள் தமிழகம் சினிமா

நடிகை மீரா மிதுன் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்

நடிகை மீரா மிதுன் மீதான மற்றொரு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்
செய்யப்பட்டுள்ளது.

தமிழில், 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் உட்பட சில படங்களில் நடித்திருப்பவர்
நடிகை மீரா மிதுன். இவர், பட்டியலின மக்கள் மற்றும் திரைத்துறையில் பணியாற்றும் பட்டியலினத்தவர்கள் தொடர்பாக அவதூறு பரப்பும் வகையிலும் பேசி வீடியோ வெளி யிட்டிருந்தார்.

இந்த வழக்கில் இதுதொடர்பாக பல்வேறு அமைப்புகள் அவர் மீது புகார் அளித்திருந்தன. இந்தப் புகாரின் அடிப்படையில் மீரா மிதுன் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு சம்மன் அனுப்பினர். ஆஜராகாமல் கேரளாவில் தலைமறைவாக இருந்த அவரை போலீசார் கைது செய்தனர். அவருடைய நண்பர் அபி்ஷேக் என்பவரும் கைது செய்யப்பட்டார். பின்னர் புழல் சிறையில் அவரை அடைத்தனர்.

இந்நிலையில், சென்னையில் தனியார் நட்சத்திர விடுதியின் மேலாளரை மிரட்டியதாக அளிக்கப்பட்ட புகாரில், நடிகை மீரா மிதுன் மீது எழும்பூர் காவல் நிலைய போலீசார் வழக்குப் Chargesheetபதிவு செய்துள்ளனர். ஆபாசமாக பேசுதல் மற்றும் கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் 30 பக்க குற்றப்பத்திரிகையை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் போலீசார் தாக்கல் செய்துள்ளனர்.

இந்த வழக்கு விசாரணைக்காக எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடிகை மீரா மிதுன் நாளை ஆஜர்படுத்தப்படுகிறார்.

Advertisement:
SHARE

Related posts

இனவெறி சர்ச்சை; பந்துவீச்சை நிறுத்திய சிராஜ் – மன்னிப்பு கேட்ட ஆஸி.,

Jayapriya

வேளாண் சட்டங்களை எதிர்த்து முதலமைச்சர் தீர்மானம்: காங்கிரஸ் வரவேற்பு

Gayathri Venkatesan

வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப்பெறும் என்பதில் நம்பிக்கை இல்லை – டி.ஆர். பாலு

Jeba Arul Robinson