பத்ம விருதுகள் விழா – முறையான அழைப்பு வரவில்லை என விஜயகாந்த் குடும்பத்தினர் குற்றச்சாட்டு!

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கான முறையான அழைப்பு வரவில்லை என விஜயகாந்த் குடும்பத்தினர் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களை கெளரவிக்கும்…

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கான முறையான அழைப்பு வரவில்லை என விஜயகாந்த் குடும்பத்தினர் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களை கெளரவிக்கும் வகையில் பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. கலை, அறிவியல், மருத்துவம், இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு மத்திய அரசு பத்ம விருதுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டின் முக்கிய பிரமுகர்கள், சாதனையாளர்களுக்கு பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவிக்கப்பட்டது.

டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் இன்று பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில், பிரதமர் மோடி, உள்ளதுறை அமைச்சர் அமிக்க்ஷா உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

இதையும் படியுங்கள் : “தோல்வி பயத்தில் மத உணர்வுகளை தூண்டிவிடுகிறார்” – பிரதமர் மோடியின் பேச்சுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

குறிப்பாக, 5 பேருக்கு பத்ம விபூஷண் விருதுகளையும், 17 பேருக்கு பத்ம பூஷண் விருதுகளையும் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார்.மேலும், 110 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டது.முன்னாள் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடுவிற்கு பத்ம விபுஷண் விருது வழங்கப்பட்டது. மேலும், மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில், மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு பத்ம விபூஷன் விருது கொடுக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்ததை தொடர்ந்து இதுவரை முறைப்படி எந்த அழைப்பும், எந்த அறிவிப்பும் அவருடைய குடும்பத்திற்கு கொடுக்கவில்லை என விஜயகாந்த் குடும்பத்தினர் சார்பாக தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், விருது தொடர்பாக மத்திய அரசு சார்பாக இதுவரை யாரும் பிரேமலதா விஜயகாந்திடமோ மற்றும் அவர்களுடைய மகன்களிடமும் இதுவரைக்கும் எதுவும் பேசவில்லை எனவும் கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.