தயாரிப்பாளராகும் விருப்பம் தனக்கு இல்லை என நடிகர் ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்துள்ளார்.
ஆர்.ஜே.பாலாஜி நடித்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் ரன் பேபி ரன் திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெற்றது. விழாவில் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி, தயாரிப்பாளர் பிரின்ஸ் பிக்சர்ஸ் லட்சுமணன், விவேக் பிரசன்னா, ராஜ் ஐய்யப்பா, இயக்குனர் ஜியேன் கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பிறகு நடிகர் விவேக் பிரசன்னா, இயக்குனர் கிருஷ்ணகுமார், உள்ளிட்ட படக்குழுவினர் ஒவ்வொருவராக மேடையில் இருந்து எழுந்து வந்து படம் குறித்தும், படத்தில் நடித்தது பற்றியும் தங்களது கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர்.
அவர்களை தொடர்ந்து பேசிய நடிகர் ஆர் ஜே பாலாஜி, இது ஒரு சிறிய படம். படம் நல்லா இருக்கிறது என்று ஒரு பேச்சு பரவி தான் மக்கள் வருவார்கள். முதல் காட்சிக்கு 5000 ரசிகர்கள் வரும் அளவிற்கு இது பெரிய படம் இல்லை. இதை எப்படி மக்கள் பார்ப்பார்கள் என்ற சந்தேகம் இருந்தது. பெரிய பெரிய திரையரங்குகளில் எங்களுக்கு காட்சிகள் ஒதுக்கீடு செய்தது மகிழ்ச்சியாக உள்ளது.
ஒரு சீரியஸ் கதாபாத்திரத்தில் நடிப்பது ரொம்ப கஷ்டம். அதே நேரத்தில் காமெடியா கத்தி பேசுறது மிகவும் சுலபமாக இருக்கும். சினிமாவில் இருந்து நிறைய நடிகர்கள் எனக்கு வாழ்த்து தெரிவித்தனர். அது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
என்னுடைய இந்த படத்தின் தயாரிப்பாளருக்கு ரொம்பவே மகிழ்ச்சி. அதே போல அடுத்த படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் எனக்கு மோதிரம் எல்லாம் போட்டார். அவரும் இப்படத்தை பார்த்துவிட்டு மகிழ்ச்சியடைந்து வெகுவாக பாராட்டினார். அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் படக்குழு சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இதுவரை நான் நடித்த படங்களில் எனக்கு மிகவும் பிடித்தது ஊர்வசி மேடம் தான். அவருடன் நடிக்கும் போது மிகவும் சந்தோசமாக இருக்கும். தமிழ்நாட்டில் 1000 திரைகள் தான் உள்ளது. எல்லா பண்டிகைகளுக்கும் பெரிய படங்கள் மட்டும் தான் வருகிறது. மீதி உள்ள நேரங்களில் தான் மற்ற படங்கள் வர முடியும். இனி தமிழ்
சினிமா இப்படித்தான் இருக்கும்.
படங்களுக்கு என்னால் முடிந்த புரொமோஷன் செய்கிறேன். அதற்காக ஒரு புரொமோஷன் நிறுவனம் தொடங்கி என்னுடைய குழு மூலமாக அதை செய்து வருகிறேன். புதிதாக 2 படங்கள் நடித்து வருகிறேன். அதில் ஒரு படம் முடிந்து விட்டது . மற்றொரு படம் நடித்து வருகிறேன்.
படங்களை தயாரிக்கும் விருப்பம் எதுவும் தற்போது இல்லை. என்னுடைய திறமையை வைத்து என்னால் முடிந்ததை செய்கிறேன் என நடிகர் ஆர் ஜே பாலாஜி தெரிவித்துள்ளார்.