முழு ஊரடங்குக்கு அவசியமில்லை: தமிழக அரசு!

மே 1ம் தேதி ஊரடங்கு அமல்படுத்த வேண்டிய அவசியமில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை மே 2-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் மே 1-ம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்த…

மே 1ம் தேதி ஊரடங்கு அமல்படுத்த வேண்டிய அவசியமில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை மே 2-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் மே 1-ம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மே 1-ம் தேதி விடுமுறை தினம் என்பதால் முழு ஊரடங்கிற்கு அவசியம் இல்லை என தெரிவித்துள்ள தமிழக அரசு, 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி முகாம் தொடங்க உள்ளதால், அதனை தடுக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளது.

மே 1-ம் தேதி முழு ஊரடங்கு அறிவிப்பதா வேண்டாமா என்பது குறித்து அரசே முடிவு செய்யலாம் என தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், வாக்கு எண்ணிக்கை மையங்களில் ஊடகங்களை அனுமதிப்பது குறித்து விளக்கமளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நாளை ஒத்திவைத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.