முக்கியச் செய்திகள் செய்திகள் சினிமா

தெலுங்கில் ரீமேக் ஆகிறது தனுஷின் ’கர்ணன்’!

தமிழில் வரவேற்பை பெற்ற தனுஷின் ’கர்ணன்’ படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது.

நடிகர் தனுஷ் நடித்து கடந்த 9 ஆம் தேதி வெளியான படம், ’கர்ணன்’. மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் இந்தப் படத்தை வி.கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார்.

தனுஷ் ஜோடியாக மலையாள நடிகை ரஜிஷா விஜயன் நடித்திருக்கிறார். மற்றும் லால், லட்சுமி பிரியா, நட்டி, கெளரி கிஷன் உட்பட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.

இந்தப் படம் தமிழில் வரவேற்பைப் பெற்றுள்ளதை அடுத்து தெலுங்கில் ரீமேக் ஆகிறது. பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் பெல்லம்கொண்டா சுரேஷ், இந்தப் படத்தின் ரீமேக் உரிமையை பெற்றுள்ளார். இதில் இவர் மகன் பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீநிவாஸ் நாயகனாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. கர்ணன் படத்தில் நடித்த ரஜிஷா விஜயன் இதிலும் நாயகியாக நடிக்கலாம் எனக் கூறப்படுகிறது.

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கிய ‘அசுரன்’ படமும் தெலுங்கில் ‘நாரப்பா’ என்ற பெயரில் ரீமேக் ஆகி இருக்கிறது. இதில் தனுஷ் நடித்த கேரக்டரில் வெங்கடேஷ் நடித்துள்ளார்.

Advertisement:

Related posts

100 ஆண்டு வெற்றிக்காக பணியாற்றுங்கள் :ராஜேந்திர பாலாஜி!

Karthick

திமுக வேட்பாளர் ஜீவா ஸ்டாலினுக்கு மாற்றாக கு.சின்னத்துரை!

Jeba

டிஜிட்டலில் உருவாகிறது எம்.ஜி.ஆரின் ‘உலகம் சுற்றும் வாலிபன்’!

Karthick