“2024-ல் நெல்லையில் சாதி ரீதியான கொலைகள் ஏதும் நடைபெறவில்லை” – எஸ்பி சிலம்பரசன் தகவல்!

திருநெல்வேலி மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் கடந்த ஆண்டு சாதி ரீதியான கொலைகள் ஏதும் நடைபெறவில்லை என அம்மாவட்ட எஸ்பி சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.  திருநெல்வேலி மாவட்டத்தில் 2024-ஆம் ஆண்டு சாதி ரீதியான படுகொலைகள் ஏதும் நடைபெறவில்லை…

திருநெல்வேலி மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் கடந்த ஆண்டு சாதி ரீதியான கொலைகள் ஏதும் நடைபெறவில்லை என அம்மாவட்ட எஸ்பி சிலம்பரசன் தெரிவித்துள்ளார். 

திருநெல்வேலி மாவட்டத்தில் 2024-ஆம் ஆண்டு சாதி ரீதியான படுகொலைகள் ஏதும் நடைபெறவில்லை என அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது;

“திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 2024ஆம் ஆண்டு பதிவான கொலை வழக்குகள், கடந்த 2023-ம் ஆண்டில் பதிவான கொலை வழக்குகளைவிட 21 விழுக்காடு குறைவாக பதிவாகியுள்ளது. இந்த கொலை வழக்குகளில் சம்பந்தபட்ட 106 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் 69 பேர்மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் அனைத்து கட்டங்களிலும் எடுத்த கடுமையான நடவடிக்கைளின் காரணமாக, திருநெல்வேலி மாவட்டத்தில் 2024-ஆம் ஆண்டு சாதி ரீதியான படுகொலைகள் ஏதும் நடைபெறவில்லை.

மேலும் நடக்கவிருந்த பல கொலைகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் தடுக்கப்பட்டுள்ளது. 17 கொலைகள் காவல்துறையினரின் நடவடிக்கைகளால் தடுக்கப்பட்டு, 185 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2024-ல் 13 கொலை வழக்குகளில் 23 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வாங்கி தரப்பட்டுள்ளது. கொலை முயற்சி வழக்கில், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 6 குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வாங்கி தரப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இதுவே முதல்முறையாகும்” என நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் தகவல் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.