நிவின் பாலி நடிக்கும் ‘மலையாளி ஃப்ரம் இந்தியா’ – கவனம் ஈர்க்கும் டைட்டில் வீடியோ!

நிவின் பாலி என்டர்டெயினராக களமிறங்கும் ”மலையாளி ஃப்ரம் இந்தியா” படத்தின் டைட்டில் வீடியோ வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு பிருத்வி ராஜ் நடிப்பில் வெளியான ‘ஜன கண மன’ திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்த மலையாள…

நிவின் பாலி என்டர்டெயினராக களமிறங்கும் ”மலையாளி ஃப்ரம் இந்தியா” படத்தின் டைட்டில் வீடியோ வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு பிருத்வி ராஜ் நடிப்பில் வெளியான ‘ஜன கண மன’ திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்த மலையாள இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி அடுத்ததாக நிவின் பாலி உடன் கூட்டணி சேர்ந்துள்ளார். இந்த படத்துக்கு “மலையாளி ஃப்ரம் இந்தியா” எனப் பெயரிடப்பட்டுள்ளது. நிவின் பாலி தவிர, தயன் ஸ்ரீனிவாசன், அனஸ்வாரா ராஜன், ஷைன் டைம் சாக்கோ போன்ற பலர் இப்படத்தில் நடிக்கின்றனர்.

இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு படத்தின் டைட்டில் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. டைட்டில் வீடியோ வித்தியாசமான முறையில் அமைந்துள்ளதால் இந்த வீடியோ வைரலாகி வருகிறது. மலையாளத்தில் கடந்த சில வருடங்களாக காமெடி பக்கம் திரும்பாமல் சீரியஸான படங்களே செய்துகொண்டிருந்த நிவின் பாலி மீண்டும் ஒரு என்டர்டெயினராக களமிறங்கும் படம் என்று அறிவிப்புடன் ”மலையாளி ஃப்ரம் இந்தியா” படத்தின் டைட்டில் வீடியோ வெளியாகியுள்ளது.

அதேநேரம் ‘ஜன கண மன’ திரைப்படத்தில் அரசியலை நேரடியாக பேசியிருந்த டிஜோ ஜோஸ் ஆண்டனி, இந்த டைட்டில் வீடியோவை அரசியல் சட்டயருடன் முடித்திருப்பதும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்துகிறது. மேலும், இது பான் இந்தியா படமல்ல, மலையாளத்தில் மட்டும் வெளியாகும் எனவும் அறிவித்துள்ளனர். இந்த டைட்டில் வீடியோ கவனம் ஈர்த்து வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.