தனது கனவு நிறைவேறியது மகிழ்ச்சியே! – நகைச்சுவை நடிகர் முத்துகாளை!

இன்று முதல் நகைச்சுவை ஸ்டண்ட் நடிகர் முத்துகாளை M.A , B. Lit முடித்த ‌பட்டதாரி ஆகிறார். முத்துக்காளை , தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். பல்வேறு திரைப்படங்களில் நடித்து பிரபலமான நகைச்சுவை…

இன்று முதல் நகைச்சுவை ஸ்டண்ட் நடிகர் முத்துகாளை M.A , B. Lit முடித்த ‌பட்டதாரி ஆகிறார்.

முத்துக்காளை , தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். பல்வேறு திரைப்படங்களில் நடித்து பிரபலமான நகைச்சுவை நடிகராவார். இந்நிலையில், நேற்று வெளியான B. Lit மூன்றாம் ஆண்டு தேர்வில் நடிகர் முத்துகாளை முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று இருக்கிறார். ஏற்கெனவே இவர் தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைகழகத்தில் ( TAMIL NADU OPEN UNIVERSITY ) யில் 2017 ஆண்டில் B.A HISTORY யில் இரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தார்.

அதனை தொடர்ந்து, 2019 இல் M.A TAMIL முதல் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருந்த நிலையில் நேற்று வெளியான B.Lit தமிழ் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று இருக்கிறார் .
தான் ( ஒரு) பட்டதாரி ஆக வேண்டும் என்ற கனவு இப்போது ( மூன்று ) பட்டங்களுக்கு சொந்தக்காரர் ஆனார். தனது கனவு நிறைவேறியது மகிழ்ச்சியே என கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.