‘நித்தியானந்தா ஒரு பொருட்டே அல்ல, வந்தால் கைதுதான்’: மதுரை ஆதீனம்

மதுரை ஆதீன மடத்துக்குள் நித்தியானந்தா நுழைந்தால் கைது செய்யப்படுவார் என ஆதீன மடாதிபதி தெரிவித்துள்ளார். மதுரை ஆதீனத்தின் 293-வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மக்களோடு…

மதுரை ஆதீன மடத்துக்குள் நித்தியானந்தா நுழைந்தால் கைது செய்யப்படுவார் என ஆதீன மடாதிபதி தெரிவித்துள்ளார்.

மதுரை ஆதீனத்தின் 293-வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மக்களோடு மக்களாக எப்போதும் தொடர் பில் இருப்பேன் எனவும், அரசே ஆலயத்தை விட்டு வெளியேறு என்ற போராட்டத் திற்காக கன்னியாகுமரி முதல் சென்னை வரை நடை பயணம் மேற் கொண்டவன் தான் என்றும் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் தொடர்புடையவன் என்றும் தெரிவித்தார்.

சமூக நல்லிணக்க மாநாடுகளுக்கு அழைத்தால் செல்வேன் என குறிப்பிட்ட அவர், திருக்குர் ஆனையும், பைபிளையும் ஏற்றுகொள்வதாகவும் கூறினார். நித்தியானந்தா குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், நித்தியானந்தா ஒரு பொருட்டே இல்லை. அவர் ஆதீன மடத்துக்குள் வந்தால் கைது செய்யப்படுவார் என எச்சரித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.