முக்கியச் செய்திகள் சினிமா

பெண்களின் குடும்ப சிக்கலை பேசும் அன்னபூரணி படம்

பெண்கள் குடும்ப அமைப்பிற்குள் அனுபவிக்கும் சிரமங்களை, ஒரு மாறுபட்ட திரில்லர் டிரமாவாக அன்ன பூரணி படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.

கமலா ஹரி பிக்சர்ஸ் மற்றும் ஒன் ஒஹன் பிக்சர்ஸ் நிறுவனங்களின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் லயோனல் ஜோஸ்வா இயக்கத்தில், லிஜோமோல் ஜோஸ், லாஸ்லியா, மெட்ராஸ் ஹரிகிருஷ்ணன் ஆகியோர் நடிப்பில் புதுவிதமாக உருவாகியுள்ள திரில்லர் டிராமா திரைப்படம் அன்னபூரணி.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை பிரபல இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் முன்னணி நடிகர் ஜெயம் ரவி ஆகியோர் சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டனர். கதாபாத்திரங்களின் இயல்பையும், மாறுபட்ட கதைக்களத்தையும் வெளிப்படுத்தும்படியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான வேகத்தில், திரை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

குடும்ப அமைப்பிற்குள் வாழும் ‘பூரணி’ , குடும்ப அமைப்பிற்கு வெளியே வாழும் ‘அனா’ஆகிய இருவரின் பயணமே இந்தப்படம். பெண்கள் குடும்ப அமைப்பிற்குள் அனுபவிக்கும் சிரமங்களை, ரசிகர்களுக்குப் பிடிக்கும் வண்ணம், ஒரு மாறுபட்ட திரில்லர் டிரமாவாக இப்படத்தின் கதை சொல்லப்பட்டுள்ளது.

குறிப்பாக பாடலாசிரியர் யுகபாரதி இப்படத்தின் பாடல்களை எழுதியதுடன் படத்திற்கான வசனங்களையும் எழுதியுள்ளார். மராத்தி ஒளிப்பதிவாளர் ஹெக்டர் ஒளிப்பதிவு செய்ய, 96 புகழ் கோவிந்த் வஸந்தா இசையமைத்துள்ளார். லாஸ்லியா, லிஜோமோல் ஜோஸ் முதன்மை பாத்திரங்களில் நடிக்க, மெட்ராஸ் ஹரிகிருஷ்ணன், ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்த நிலையில், இறுதி கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. படத்தின் டிரெய்லர், இசை மற்றும் திரை வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அதிமுக பிரமுகர் வீட்டில் 21 கிலோ தங்கம், 10 கார்கள் பறிமுதல்

Halley Karthik

உதயநிதி உருவப்படத்தை எரித்து அமமுகவினர் ஆர்ப்பாட்டம்!

Niruban Chakkaaravarthi

கிராம உதவியாளர் தற்கொலை முயற்சி!

G SaravanaKumar