நீலகிரி மாவட்டம் மசினகுடியில் இருந்து மாயார் செல்லும் சாலையில் நள்ளிரவு சாலையில் சென்ற வாகனங்களை காட்டு யானை கூட்டம் வழிமறித்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
நீலகிரி மாவட்டம் மசினகுடியில் இருந்து மாயார் செல்லும் சாலையானது அடர்ந்த வனப்பகுதி உள்ளடக்கிய சாலையாகும். இங்குள்ள வனப்பகுதியில் யானை, கரடி, குரங்கு உள்ளிட்ட பல அரிய வனவிலங்குகள் வசித்து வருகின்றன. வனவிலங்குகள் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி ஊருக்குள் வருவது வழக்கமாகும்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவில் சில வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அப்போது திடீரென வனப்பகுதிக்குள் வெளியேறிய காட்டு யானை கூட்டமொன்று சாலையை வழிமறித்தப்படி நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்து வாகனத்தை நிறுத்தினர்.
ஆனால் யானை கூட்டம் எங்கும் நகராமல் அங்கேயே நின்றன. அப்போது பசியோடு தவித்து கொண்டிருந்த குட்டியானைக்கு தாய் யானை ஒன்று எவ்வித சலனமும் இன்றி பாலுட்டியது. சிறிது நேரத்திற்கு பின்னர் யானை கூட்டம் எவ்வித தொந்தரவும் இன்றி சாலையை விட்டு நகர்ந்து சென்றன. இதனால் வாகன ஓட்டிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
வேந்தன்







