தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி திரையரங்குகளை தொடர்ந்து இயக்க திரையரங்கு உரிமையாளர் சங்கம் முடிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது. மேலும் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும், இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை, இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் இரவு நேர ஊரடங்கின்போது தனியார், அரசு பொது பேருந்து போக்குவரத்து, வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகன சேவைக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து இன்று திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் சார்பில் கானொலி வாயிலாக ஆலோசனன கூட்டம் ஒன்று நடைப்பெற்றது. அந்த ஆலோசனை கூட்டத்தில் 50% இருக்கைகளுடன் கொண்டு திரையரங்கு இயக்கப்படும் என்றும் தற்போது உள்ளபடியே காலை, மதியம், மாலை என 3 காட்சிகள் திரையிடப்படும் எனவும் இரவு நேர காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது எனவும் திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.







