மத்திய பிரதேசத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்

மத்திய பிரதேச மாநிலம் போபால், இந்தூர் ஆகிய இரு நகரங்களில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது. கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் சீனாவில் இருந்து உலகம் முழுவதும் கொரோனா பரவியது.…

மத்திய பிரதேச மாநிலம் போபால், இந்தூர் ஆகிய இரு நகரங்களில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது.

கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் சீனாவில் இருந்து உலகம் முழுவதும் கொரோனா பரவியது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இதனால், அம்மாநிலத்தில் நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, அதிக பாதிப்புள்ள நகரங்களான போபால் மற்றும் இந்தூரில் இன்று முதல் மறு அறிவிப்பு வரும்வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் குவாலியர், ஜபல்பூர், உஜ்ஜைன், ரத்லம், சிந்த்வாரா, புர்ஹான்பூர், பெத்துல் மற்றும் கார்கோன் ஆகிய 8 நகரங்களில் உள்ள சந்தைகள் இன்று இரவு 10 மணிக்கு மூடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.