முக்கியச் செய்திகள் உலகம்

பதவியேற்று முதன்முறையாக செய்தியாளர்களை சந்திக்கும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் முதன்முறையாக, மார்ச் 25ம் தேதி செய்தியாளர்களை சந்திக்க உள்ளார்.

அமெரிக்காவில் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில், அதிபராக ஜோ பைடன் தேர்வு செய்யப்பட்டார். இருப்பினும் தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி முன்னாள் அதிபர் டிரம்பின் ஆதரவாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். மேலும், பைடனின் வெற்றியை எதிர்த்து டிரம்பின் ஆதரவாளர்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இருப்பினும் அந்த வழக்கை கோர்ட் தள்ளுபடி செய்தது. அதன்படி பைடன் ஜனவரி 20ம் தேதி முறைப்படி அதிபராக பதவியேற்றார்.

வழக்கமாக அமெரிக்க அதிபராக ஒருவர் பொறுப்பேற்ற பின் 33 நாட்களுக்குள் செய்தியாளர்களை சந்திப்பது வழக்கம். ஆனல், ஜோ பைடன் அதிபராக பொறுப்பேற்று 3 மாதங்களாகும் நிலையில், அவர் செய்தியாளர்களை சந்திக்காமல் இருக்கிறார். இந்நிலையில் வரும் 25ம் தேதி அவர் செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக வெள்ளை மாளிகையின் செய்தி செயலாளர் ஜென் சகி தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பின்போது செய்தியாளர்கள் 40 கேள்விகள் வரை ஜோ பைடனிடம் கேட்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

தேசிய கீதம் இசைக்கும் போது எழுந்து நிற்காவிட்டால் குற்ற‍ம் அல்ல‍: ஜம்மு-காஷ்மீர் உயர் நீதிமன்றம்

Vandhana

“நிகழ்ச்சி முடிந்து விட்டது” – ராகுல் காந்தி ட்வீட்

Saravana Kumar

நாளை யூரோ கோப்பை அரையிறுதி : ஸ்பெயின், இத்தாலி அணிகள் மோதல்

Vandhana