நாளை முதல் இரவு நேர ஊரடங்கு

உத்தரப்பிரதேசத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. ஒமிக்ரன் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், மாநில அரசுகள் இரவு நேர ஊரடங்கை கடைப்பிடிக்கலாம் என மத்திய…

உத்தரப்பிரதேசத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

ஒமிக்ரன் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், மாநில அரசுகள் இரவு நேர ஊரடங்கை கடைப்பிடிக்கலாம் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதையடுத்து, மத்தியப்பிரதேசத்தில் இரவு நேர ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து தற்போது உத்தரப்பிரதேச அரசும் இரவு நேர ஊரடங்கை நடைமுறைப்படுத்த உள்ளது.

நாளை முதல் இரவு 11 மணி தொடங்கி காலை 5 மணி வரை ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் 200 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்றும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் இதுவரை 2 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் பரவிய நிலையில், தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இரவு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக உத்தரப் பிரதேச மாநில அரசு தெரிவித்துள்ளது. ஏற்கனவே, மத்தியப்பிரதேச மாநிலத்தில் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.