நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராஹிமிற்கு மும்பையில் தொடர்புடைய பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு நிறுவனம் (NIA) அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளது.
மும்பையில் 1993ஆம் ஆண்டு நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தேடப்படும் குற்றவாளியான தாவூத் இப்ராஹிம் மற்றும் அவரது டி கம்பெனி மீது சட்டவிரோத தடுப்புச் சட்டத்தின்கீ்ழ் தேசிய புலனாய்வு நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதத்தில் வழக்குப் பதிவு செய்திருந்தது.
இந்நிலையில், தாவூத் இப்ராஹிமிற்குத் தொடர்புடைய மும்பையில் உள்ள பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு நிறுவனம் அதிரடி சோதனையை மேற்கொண்டுள்ளது. மும்பையின் சுற்று வட்டாரப் பகுதிகளான நாக்படா, பொரிவாலி, கொரிகான், பாரெல், சாண்டக்ரூஸ் உள்ளிட்ட பகுதிகளில் இந்த ரெய்டு நடத்தப்படுகிறது.
இப்பகுதிகளில் உள்ள ஹவாலா ஆபரேட்டர்கள், போதைப் பொருள் கடத்துபவர்கள், தாவூத் இப்ராகிமிக்கு நெருக்காமன குற்றவாளிகளைப் பிடிக்க சோதனை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.
Advertisement: