முக்கியச் செய்திகள் உலகம்

நெல் பயிரிடாதீங்க ; முதல்வர் வேண்டுகோள்

நாட்டில் தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதால் நெல் பயிரிடாதீங்கன்னு முதலமைச்சர் ஒருவர் விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.  இப்படி ஒரு சூழல் எந்த மாநிலத்தில்ன்னு நம்ம எல்லோரும் ஆதங்கப்படுவோம். இது நம்ம நாட்டில் இல்லை என்பது சற்று ஆறுதலான விஷயம் என்றாலும், நம் அண்டை நாடான பாகிஸ்தானில் இதுதான் கள நிலவரமாக உள்ளது.

பாகிஸ்தான் நாட்டில் சிந்தி மாநிலத்தின் முதலமைச்சர் செய்யது மூரத் அலிஷா, அம்மாநிலத்தில் உள்ள விவசாயிகளின் நிலையை அறிய டோஷ் கான் என்ற கிராமத்திற்கு சென்றார். அப்போது விவசாயிகள் தங்களது பல்வேறு பிரச்சனைகளை கண்ணீர் மல்க முறையிட்டுள்ளனர். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த மூன்று ஆண்டுகளாக மாநிலத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடி வருவதாகவும், இதனை தீர்க்க பாகிஸ்தானின் மத்திய அரசு சரியான திட்டங்களை முன்னெடுக்கவில்லை என குற்றம் சாட்டினார்

.

தண்ணீரைக் கொண்டு 80 சதவீத விவசாயிகள் நெல், கோதுமை, கரும்பு மற்றும் பருத்தியை விளைவிக்கின்றனர். இதுநாட்டின் பொருளாதார வளர்ச்சியில் 5 சதவீதம் மட்டுமே உள்ளது. மேலும் தண்ணீர் பஞ்சம் அதிகரித்து வருவதால் நெல் பயிரிடுவதை விவசாயிகள் தவிர்ப்பது நல்லது எனக்கூறினார். மேலும், எல்லோருக்கும் சம அளவில் தண்ணீர் கிடைப்பதில்லை என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.அதற்கு காரணம் பாகிஸ்தானில் நிலவும் நிர்வாக சீர்கெடும் ஒரு முக்கிய காரணம் என குற்றம் சாட்டியுள்ளார்.

சிந்தி முதலமைச்சர் பேச்சு சர்ச்சைக்குரியதாக இருந்தாலும், உலக முழுவதும் விவசாயிகள் தண்ணீருக்காக போராட வேண்டிய சூழல் வரும் என்ற காலநிலை வல்லுனர்கள் கூறி வருகின்றனர். இதனை தடுக்க இயற்கையோடு இயந்து பல்வேறு பருவநிலை மாற்றத்திற்கான திட்டங்களை கொண்டு வர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Advertisement:
SHARE

Related posts

வேலைக்கா வர சொல்ற… 153 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

Ezhilarasan

“மாற்றுத்திறனாளிகளுக்கு 5% இடஒதுக்கீடு” – கமல்ஹாசன் கோரிக்கை

Halley Karthik

தெலுங்கு வருடப்பிறப்பை முன்னிட்டு ஆடுகள் விற்பனை களைக்கட்டியது!

Gayathri Venkatesan