மரச்செக்கு எண்ணெய் தயாரிப்பில் அசத்தும் “மகிழ்” நிறுவனம்

கொரோனா காலத்தில் பொதுமக்களுக்கு உடல் ஆரோக்கியம் மீது விழிப்புணர்வு அதிகரித்துள்ள நிலையில், ஆர்கானிக் பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது. அந்தவகையில், இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் மரச்செக்கு எண்ணெய் விற்பனையும் அதிகரித்துள்ளது. பொதுமக்களின் சமையல் எண்ணெய்…

கொரோனா காலத்தில் பொதுமக்களுக்கு உடல் ஆரோக்கியம் மீது விழிப்புணர்வு அதிகரித்துள்ள நிலையில், ஆர்கானிக் பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது. அந்தவகையில், இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் மரச்செக்கு எண்ணெய் விற்பனையும் அதிகரித்துள்ளது.


பொதுமக்களின் சமையல் எண்ணெய் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகேயுள்ள படமுடிபாளையம் கிராமத்தை சேர்ந்த “மகிழ்” நிறுவனம் பாரம்பரிய முறையில், நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட அனைத்து சமையல் எண்ணெய் வகைகளையும் மரச்செக்கில் ஆட்டி விற்பனை செய்கிறது.


வாகை மரச்செக்கில் தயாரிக்கப்படும் இந்த எண்ணெய் வகைகள், இயற்கை மணம் மற்றும் தரம் மாறாமல் அப்படியே கிடைப்பதால், பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்வதாக கூறுகிறார், மகிழ் நிறுவனத்தின் உரிமையாளர் பிரபாகர். இவர் ஒரு பொறியியல் பட்டதாரி என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்கானிக் உணவுப்பொருள் மீதான ஆர்வத்தின் காரணமாக, தரமான பொருட்களை வழங்கி மக்களை மகிழ்விக்க “மகிழ் ஃபுட்ஸ்” எண்ணெய் நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருவதாக நெகிழ்ச்சியுடன் கூறுகிறார். தற்போதைய நிலையில், நாமக்கல், திருப்பூர் மாவட்டங்களில் “மகிழ்” எண்ணெய் வகைகள் கடைகளுக்கு விநியோகிக்கப்படுகின்றன. தங்கள் நிறுவனத்தின் எண்ணெய் வகைகளை, விரைவில் தமிழ்நாடு முழுவதும் விநியோகஸ்தர்கள் மூலம் விற்பனைக்கு கொண்டுச் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் பிரபாகர் கூறுகிறார்.


மேலும், நிலக்கடலை, எள், கொப்பரை தேங்காய் உள்ளிட்ட எண்ணெய் வித்துக்களை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்து வருவதாகவும், இதனால் விவசாயிகளுக்கும் உரிய லாபம் கிடைப்பதாகவும் பிரபாகர் கூறுகிறார்.

“மகிழ்” நிறுவனத்தில் தினமும் ஏராளமான பொதுமக்கள் நேரடியாக அவர்கள் கண்முன்பு எண்ணெய் ஆட்டி பெற்றுச் செல்கின்றனர். மகிழ் ஃபுட்ஸ் நிறுவனத்தின் எண்ணெய் தயாரிப்புகளை வாங்கவும் வர்த்தகத் தொடர்புக்கும் 96005 06810 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும், மகிழ் ஃபுட்ஸ் தயாரிப்புகள் குறித்த விவரங்களை http://www.magilfoods.com இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.